கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் கலவரங்கள் துவங்கிய பொழுது செய்தித்தாள்களில் அது தொடர்பான செய்திகளை வாசித்ததுண்டு. அப்போதெல்லாம் அந்தக் இனக் குழுவின் பெயரை எப்படி உச்சரிப்பது? மீட்டியா, மீத்தீயா? அல்லது மெய்ட்டியா என்பதிலேயே எனக்கு குழப்பம் இருந்தது. அதுபோக ஒரு குழுவுக்கு ஆதரவான மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மற்றொரு குழு போராட்டம் நடத்துகிறது என்ற அளவில்தான் எனது அடிப்படைப்...
இருண்ட மலைகளும் இனப்பகை அரசியலும்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருக்கிறேன். அப்படிச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்று இப்போது புரிகிறது. ஏனென்றால் அன்று இம்பால் பள்ளத்தாக்கை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு மணிப்பூரைப் பார்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். உண்மையில் மணிப்பூரின் மொத்த பரப்பளவில் இம்பால் என்பது ஒன்றுமேயில்லாத ஒரு சிறு புள்ளி. ஆனால் அந்நிலப்பரப்பில் வாழும் மெய்தி பெரும்பான்மை சமூகத்தினர்தாம் மொத்த...