எழுத்தாளர்களின் தலையாய பிரச்னைகளுள் முதன்மையானது, கழுத்து வலி. பண்டைக்காலத் தமிழ் சினிமா மணப்பெண்களைப் போலப் பெரும்பாலான நேரங்களில் குனிந்த தலை நிமிராமல் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதால் இது வருகிறது.
அறுக்கமாட்டாதவன்
எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...