என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது பெரிய விடுதலை. இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் பை-ப்ராடக்டுடன் வரும்.
byngeapp சிறந்த கேள்வி – போட்டி முடிவு
ByngeThamizh அறிவித்திருந்ததை ஏற்றுக் கேள்விகள் அனுப்பிய அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி. சுமார் இருநூறு கேள்விகள் வந்திருந்தன. அனைத்தையும் படித்து, கூடியவரை அந்தப் பக்கத்திலேயே அவற்றுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. நேரமின்மையே காரணம். ஓரிரு நாள்களில் எழுதிவிடுகிறேன். ஆனால் இன்று பரிசுக் கேள்வி பதிலை அறிவித்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். ஐந்து...
32
சொக்கன் அனுப்பிய 32 கேள்விகளும் என் பதில்களும்: 1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா? இது என் சொந்தப்பெயர். பத்திரிகை நாள்களில் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் என் சொந்தப்பெயரில் எழுதுவதே எனக்குத் திருப்தி அளிக்கிறது. யாராவது கூப்பிடும்போது ராகவன் என்று கூப்பிடாமல் பாரா என்றால்தான் சரியாக பதில் சொல்கிறேன் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்...


