ByngeThamizh அறிவித்திருந்ததை ஏற்றுக் கேள்விகள் அனுப்பிய அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றி. சுமார் இருநூறு கேள்விகள் வந்திருந்தன. அனைத்தையும் படித்து, கூடியவரை அந்தப் பக்கத்திலேயே அவற்றுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். சில கேள்விகளுக்கு இன்னும் பதில் எழுதவில்லை. நேரமின்மையே காரணம். ஓரிரு நாள்களில் எழுதிவிடுகிறேன். ஆனால் இன்று பரிசுக் கேள்வி பதிலை அறிவித்துவிட வேண்டும் என்று சொன்னார்கள். ஐந்து...
கபடவேடதாரி – ஓர் அறிமுகம்
மீண்டும் ஒரு நாவலுக்குள் வாழத் தொடங்குகிறேன். எனக்கு இதைத் தவிர வேறொன்றும் தெரியாது. எழுதுவது. அல்லது எழுதுவதைக் குறித்து நினைத்துக்கொண்டிருப்பது. நினைத்துக்கொண்டிருக்கும் நாள்களில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். எழுதத் தொடங்கிவிட்டால் வேறு ஒருவனாகிவிடுகிறேன். இப்போது தொடங்கியிருக்கும் இந்நாவல் எனக்குச் சிறிது வினோதமானது. ஏனென்றால் இரண்டு முறை இதனை எழுத ஆரம்பித்துப் பாதியில்...
கபடவேடதாரி – promo video
கபடவேடதாரி – விமரிசனப் போட்டி FAQ
1. எங்கே படிப்பது? bynge appல் வாசிக்கலாம். வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள். புதன் மற்றும் சனிக் கிழமைகளில் வெளியாகும். 2. appஐ எங்கே பெறுவது? இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. இலவசமாகத் தரவிறக்கலாம். கூகுள் அல்லது ஃபேஸ்புக் ஐடியின் மூலம் லாகின் செய்தால் போதுமானது. விரைவில் iOSக்கும் வந்துவிடும். (தொடர் முடிவடைவதற்குள்ளாகவாவது.) 3. விமரிசனம் எழுதும் போட்டி குறித்து? 50 முதல் 200 சொற்கள் வரை...
கபடவேடதாரி
என் அடுத்த நாவல், கபடவேடதாரி. bynge செயலியில் இது இப்போது தொடராக வெளி வருகிறது. வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள் பிரசுரமாகும். இந்நாவலுக்கு விமரிசனம் எழுதும் போட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் அறிவித்தேன். அதன் விவரம்: bynge appல் வெளிவர ஆரம்பித்திருக்கும் ‘கபடவேடதாரி’யைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஓர் அழைப்பு. இந்நாவல் ஐம்பது அத்தியாயங்கள் கொண்டது. வாரம் இரண்டு வீதம் இருபத்தைந்து வாரங்கள்...