என் அடுத்த நாவல், கபடவேடதாரி.
bynge செயலியில் இது இப்போது தொடராக வெளி வருகிறது. வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள் பிரசுரமாகும். இந்நாவலுக்கு விமரிசனம் எழுதும் போட்டி ஒன்றை ஃபேஸ்புக்கில் அறிவித்தேன். அதன் விவரம்:
bynge appல் வெளிவர ஆரம்பித்திருக்கும் ‘கபடவேடதாரி’யைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஓர் அழைப்பு.
இந்நாவல் ஐம்பது அத்தியாயங்கள் கொண்டது. வாரம் இரண்டு வீதம் இருபத்தைந்து வாரங்கள் வெளியாகும்.
இதன் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் விமரிசனம் எழுத நீங்கள் தயாரென்றால் இது உங்களுக்கு:
1. அனைத்து அத்தியாயங்களுக்கும் தனித்தனியே எழுத வேண்டும். bynge appல் பதிவு செய்யும் விமரிசனத்தை இங்கே ஃபேஸ்புக்கில் பிரசுரித்து என்னை tag செய்யவும்.
2. விமரிசனம் 50 சொற்களில் இருந்து 200 சொற்களுக்குள் இருக்கலாம். மேலே போனால் ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல.
3. போட்டி என்பதால் பாராட்டித்தான் எழுத வேண்டும் என்பதில்லை. பிடிக்கவில்லை என்றால் கண்டபடி திட்டினாலும் தவறில்லை.
4. நடுவே ஒன்றிரண்டு அத்தியாயங்களுக்கு எழுதாமல் விட்டால் கணக்கில் சேராது. அத்தனை அத்தியாயங்களுக்கும் எழுத வேண்டும்.
5. சிறந்த பத்து (செட்) விமரிசனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
6. தேர்வாகும் விமரிசகர்களுக்கு அடுத்த ஜனவரி புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் வெளியாகவிருக்கும் கபடவேடதாரியின் அச்சுப் பதிப்பு அன்பளிப்பாக வழங்கப்படும். தவிர அவர்களுடன் ஒரு மாலை விருந்து. சிறு நிகழ்ச்சி. கலந்துரையாடல். அதெல்லாம் ராம்ஜி பார்த்துக்கொள்வார். சுருதி டிவி கபிலன் உலகுக்குத் தெரியப்படுத்துவார்.
7. இப்போதைக்கு bynge app ஆண்டிராய்ட் போன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஆப்பிள் போன்காரர்களுக்கும் கிடைத்துவிடும். அவர்கள் ஒருவாரம் கழித்து முதலில் இருந்து படித்துவிட்டு எழுதலாம். 50 வது அத்தியாயம் பிரசுரமாகும்போது 50 விமரிசனங்களும் இருக்க வேண்டும். அவ்வளவுதான் கணக்கு.
8. நடுவராக இன்னொருவரையெல்லாம் அமர்த்துவதற்கில்லை. நானே அரசன். நானே கள்வன்.
9. வாசிப்பில் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். @வாசிப்பை நேசிப்போம் போன்ற குழும நண்பர்களை படுபயங்கர அன்புடன் அழைக்கிறேன்.
10. அவ்வளவுதான். முடிந்தால் உங்கள் பக்கத்தில் இப்போட்டி அறிவிப்பினைப் பகிர்ந்து உதவுங்கள்.
#கபடவேடதாரி_போட்டி
#byngetamil