ஆன்மிக விஷயமாக யாராவது என்னவாவது பேசத் தொடங்கினால் நான்கு வரிகளுக்குள் ஞானமடைவது என்கிற விவகாரம் வந்துவிடும். ஆனால் சிறிது யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக் குறித்து ஒரு ஜென் கதை இருக்கிறது. தடுக்கி விழுந்தால்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 24
2008ம் ஆண்டு தொழில் நிமித்தம் குரோம்பேட்டையில் இருந்து கோடம்பாக்கத்துக்குக் குடி போனேன். குரோம்பேட்டையில் இருந்தது சொந்த வீடு. கோடம்பாக்கத்தில் வாடகை வீடு. அது குறித்த சிறு வருத்தம் அப்போது இருந்தாலும் ஓரிரு மாதங்களில் மனம் சமாதானமாகிவிட்டது. காரணம், கோடம்பாக்கத்தில் எதையும் நினைத்த மறு கணமே செய்ய முடிந்ததுதான். முக்கியமாக, பயணம். குரோம்பேட்டையில் இருந்து நகர மையத்துக்கு வருவது என்பது ஊருக்குப்...
கோடம்பாக்கத்துக்குப் போன கோயிஞ்சாமி
ஒரு வழியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை குரோம்பேட்டையிலிருந்து இடம் பெயர்ந்து கோடம்பாக்கத்துக்குக் குடிவந்து சேர்ந்தேன். வீடு மாற்றியதற்கு முன் தினம் பேட்டையில் முழு நாள் மின்சாரம் கிடையாது. காலை ஆறு மணிக்குப் போன கரெண்ட், நள்ளிரவு பன்னிரண்டுக்கு வந்தது. எல்லா வேலைகளும் எனக்காக நாளெல்லாம் காத்திருந்து உறங்கத் தொடங்கியபோது, தட்டி எழுப்பி, மூட்டை கட்ட ஆரம்பித்தேன். என் நேரம். ஞாயிறு அதிகாலை இடியுடன்...