சொர்க்கம் உனக்கில்லை, நரகம் உனக்கு வேண்டாமெனில் உனக்கென ஒரு சொர்க்கத்தை நான் உருவாக்கித் தருவேன் என்று சூரிய வம்சத்துத் திரிசங்குவுக்கு நம்பிக்கையளித்த விசுவாமித்திரரின் தீவிர விசிறியாக, நிக்கோலஸ் கிக்கின் இம்மானுட குலச் சேவையை மானசீகமாகப் பாராட்டிவிட்டு இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.
நான் தேடி அமர்ந்த ஆப்புகள்
முன்னொரு காலத்தில் நிறைய பேனாக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் எழுத்தாளன் இல்லை என்பது ஒரு முக்கியக் குறிப்பு. ஆனால் பேனாக்களைப் பிடிக்கும். இங்க் பேனா, பால் பாயிண்ட் பேனா, குண்டு பேனா, ஒல்லிப் பேனா, நீல இங்க் பேனா, சிவப்பு இங்க் பேனா, பட்டையாக எழுதும் பேனா, கூராக எழுதும் பேனா. திடீரென்று ஒரு நாள், அதற்கு முன் நான் கேள்விப்பட்டே இராத எர்னஸ்ட் ஹெமிங்வே என்ற அமெரிக்க எழுத்தாளரின்...
சிம்பிள் டெக்ஸ்ட் – செயலிக் குறிப்பு
இங்கே என்னைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, ஒரு நல்ல டெக்ஸ்ட் எடிட்டருக்காக பன்னெடுங்காலமாக நான் நடத்தி வரும் துவந்த யுத்தம் பற்றித் தெரிந்திருக்கும். சும்மா நான்கு ஃபேஸ்புக் போஸ்ட் எழுதுகிறவர்களுக்கோ, ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிறுகதை எழுதுகிறவர்களுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. என்னைப் போல தினமும் ஆயிரம் சொற்களை நியமமாக வைத்திருப்பவர்களின் பிரத்தியேக இம்சை இது. மைக்ரோசாஃப்ட்...


