கிழவிக்கு எப்படியும் எண்பது வயது இருக்கும். அவள் நின்று, நடந்து நான் பார்த்ததில்லை. வீட்டை விட்டுக் கிளம்பி தெரு முனைக்கு வரும்போது மெயின் ரோடுக்குத் திரும்பும் இடத்தில் அவள் ஒரு கோணிப்பையை விரித்து சாலை ஓரம் அமர்ந்திருப்பாள். யாரையும் அழைக்க மாட்டாள். கையேந்த மாட்டாள். யார் என்ன கொடுத்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வாள். எதுவும் தராதவர்கள் மீது அவளுக்கு எந்த விமரிசனமும் இல்லை. முதலில் எப்போதாவது...
தேறாதிருக்கச் செய்தல்
சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லும் பாரம்பரியம் உள்ளபடியால் சொல்லிவிடுகிறேன். எத்தனைப் பேர் வாயில் விழுந்து புரளப் போகிறேனோ. இந்த கொரோனாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எவ்வளவு தடை உத்தரவு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் தேர்வுகளை ரத்து செய்வது, தள்ளிப் போடுவது, பார்த்து எழுதலாம் என்று அறிவிப்பது – இதெல்லாம் மாணவர்களின் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பது தவிர வேறல்ல. டிஜிட்டல்...
தொற்று
முகக் கவசம் அணிந்தேன். ஆனாலும் கொரோனா பிடித்துக்கொண்டது. ஆம். நடக்கும். யாரையும் நெருங்கிப் பேசவில்லை. கை குலுக்கவில்லை. இருப்பினும் அது வந்தது. ஆம். வரும். தியேட்டருக்குப் போகவில்லை. மாலுக்குப் போகவில்லை. கும்பலில் சேரவில்லை. அவசர, அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும்தான் வெளியே சென்றேன். இருப்பினும் பாதிக்கப்பட்டேன். சாத்தியம்தான். நாளெல்லாம் அலைந்து திரிந்து உழைக்கும் எத்தனையோ பேருடன் ஒப்பிட, என்...