கணேசன் வீட்டுக்கு வரும்போதே ஏதோ சரியில்லை என்று கௌசல்யாவுக்குத் தெரிந்துவிட்டது. என்ன, என்னவென்று நச்சரிக்கத் தொடங்கினால் சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வான். உண்மையிலேயே ஏதாவது பெரிய பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் எரிச்சலும் கோபமும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. எனவே அவனாகப் பேசுகிற வரை முகத்தை வைத்துத் தான் எதையும் கண்டுபிடித்துவிடவில்லை என்கிற பாவனையைத்...
வலி உணரும் நேரம்
எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.
புலி[க்குட்டி] வருது
ஆம். கிழக்கில் இருந்தல்ல. Prodigy சார்பாக எங்களுடைய முதல் பத்திரிகையை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை [06.07.2008] நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எங்களுடைய Prodigy ‘மேதை’ வெளியிடப்படுகிறது. இது ஒரு மாதப் பத்திரிகை. குழந்தைகள்-சிறுவர்கள்-இளைஞர்களின் பொது அறிவுக்கு விருந்தளிக்கும் இதழாக வெளிவரப்போகிறது. ஐந்து ரூபாய் விலை. ‘ப்ராடிஜி புக் க்ளப்’ என்று...