எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது. நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி...
மிருது – புதிய நாவல்
சலத்தின் உக்கிரம், ஆக்ரோஷம், தகிப்பு அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி, தொட்ட இடமெல்லாம் வருடித்தரும் விதமாக இதனை எழுதினேன்.
உரி – அடுத்த நாவல்
நாளை மறுநாள் தொடங்கும் இந்த எழுத்து வகுப்புகள், அநேகமாக இந்த ஆண்டில் நான் எடுக்கும் கடைசி வகுப்புகளாக இருக்கலாம். நாவலை ஆரம்பித்துவிட்டால் அதன் பிறகு அது முடியும் வரை வேறெதையும் செய்ய இயலாது என்பதே காரணம்.
மிருது மீம் போட்டி அறிவிப்பு
ஜந்துவை வாட்சப் சேனலில் தொடராக எழுதிய சமயத்தில் எந்தப் போட்டி அறிவிப்பும் இல்லாமலேயே மீம் புரட்சி செய்த வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
உங்கள் ஈடுபாட்டை மதித்து இம்முறை போட்டி அறிவிக்கிறேன்.
மிருது மதிப்புரைப் போட்டி அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வாட்சப் சேனலில் ‘மிருது’ நாவலை எழுதத் தொடங்குகிறேன். இது நாள்தோறும் அங்கே பிரசுரமாகும்.
உருவி எடுத்த கதை
இசகுபிசகாக புத்தி கெட்டிருந்த ஒரு சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான நாவலுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டேன். 1909ம் ஆண்டு தொடங்கி 2000வது ஆண்டு வரை நீள்கிற மாதிரி கதை. அந்தக் கதையின் ஹீரோ, கதைப்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு வயதுகளில்தான் பிறப்பான். உதாரணமாக, அவனது முதல் பிறவியில், பிறக்கும்போதே அவனுக்குப் பதினெட்டு வயது. அடுத்தப் பிறவியைத் தனது ஐந்தாவது...


