வெளிவர இருக்கும் என்னுடைய மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலுக்கு இப்போது முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வோருக்கு ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் இருபத்தைந்து சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கைப் பின் தொடர்ந்து பதிவு செய்யலாம். புத்தகம் மிக விரைவில் வெளிவரும்.
மணிப்பூர் கலவரம்: புதிய புத்தகம்
மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம். இதுதான் தலைப்பு. கடந்த ஐந்து மாதங்களாகச் செய்துகொண்டிருந்த ஆய்வு நிறைவு பெற்று, இப்போது புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எழுத்து பிரசுர வெளியீடாக விரைவில் வெளிவரும்.
அட்டைப் படம் வடிவமைப்பு: பாலா, சேலம்.
ஒரு A1B Positive சரித்திரம்
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட...
முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?
‘முழு தயிர்சாதமாக இருப்பது எப்படி?’ கிண்டிலில் (மட்டும்) வெளியாகவிருக்கும் என்னுடைய அடுத்த கட்டுரை நூல். ஆகஸ்ட் 4ம் தேதி இந்தப் புத்தகம் வெளியாகிறது. இந்தப் புத்தகத்தின் விலை ரூ. 125. ஆனால் இப்போது முதல் முன் பதிவு செய்தால் இதன் விலை ரூ. 60 மட்டுமே. முன்பதிவு வசதியின் மூலம் சரி பாதிக்கும் கீழே விலையில் தள்ளுபடி வழங்க முடிகிறது. நீங்கள் இந்தப் புத்தகத்தை முன்பதிவு செய்தால்...