அந்த மரத்தில் நிச்சயமாகப் பேய் இருக்கிறது; தவறியும் கிட்டே போய்விடாதே என்று பாட்டி சொல்லியிருந்தாள். கிட்டே போனால் மட்டும் கடிக்குமா என்று கேட்டதற்கு, ‘தின்றுவிடும்’ என்று பதில் சொன்னாள். பாபுவுக்குச் சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு பேயைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. பாட்டி கடைக்குக் கிளம்பிப் போன சமயம் அவன் தயங்கித் தயங்கி அந்தப் புளிய மரத்தை...
பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்?
தாட்சு எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வருவதற்கு முன்னர் அவளைக் குறித்த நான்கு வதந்திகளைக் கேள்விப்பட்டிருந்தேன். அவையாவன: வதந்தி 1 அவளுக்கு இருபத்து மூன்று காதலர்கள் இருக்கிறார்கள். முறை வைத்துக்கொண்டு தினம் ஒருவனுடன் மாலை வேளைகளில் வெளியே செல்வாள். அவளது அனைத்துக் காதலர்களுக்கும் அவளைக் குறித்தும் அவளது பிற காதலர்களைக் குறித்தும் தெரியும். ஆனால் அதைப் பற்றி யாரும் கேட்பதில்லை. ஒவ்வொரு காதலனும்...
இனப் படுகொலை (கதை)
மாடியில் ஓர் எழுத்தாளர் குடியிருக்கிறார். அவர் வீட்டு பால்கனியில் காயப்போட்டிருந்த அவரது மனைவியின் துப்பட்டா, காற்றில் அடித்து வந்து எங்கள் பால்கனியில் விழப்போக, அதை எடுத்துச் செல்வதற்காக வந்தார். வந்துவிட்டதால் நலம் விசாரித்துவிட்டு, ‘இப்ப என்ன சார் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு பேய்க்கதை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். உடனே எனக்கு சுவாரசியமாகிவிட்டது. ‘ஆண் பேயா? பெண்...
பேயைப் பெற்றவள் (கதை)
ஒரு ஊரில் ஒரு பெண் பேய் இருந்தது. அது இன்னும் இறக்காத ஒரு பையனைக் காதலித்தது. எப்படியாவது அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, இறந்த தன் தந்தைப் பேயிடம் சொல்லி இன்னும் இறக்காத தாயைப் போய் வரன் பேசச் சொல்லிக் கேட்டது. தந்தைப் பேய் தன் பழைய மனைவியின் கனவில் சென்று விவரத்தைச் சொல்லி, ‘நம் ஒரே மகளின் ஆசையை அன்றே நிறைவேற்றி வைத்திருந்தால் அவள் பேயாகியிருக்கவே மாட்டாள்; இப்போதாவது அவள்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 21
சரியான உத்தியோகம் அமையாமல் சுற்றிக்கொண்டிருந்த நாள்களில் என்னோடு சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்த சக சரியான வேலை அமையாத நண்பர்களில் பலர், எனக்குக் கல்கியில் வேலை கிடைத்த பிறகு என்ன காரணத்தாலோ மெல்ல மெல்ல விலகிச் செல்லத் தொடங்கினார்கள். இத்தனைக்கும் எங்கள் வட்டத்தில் யாருக்கு நல்ல வேலை கிடைத்தாலும் அவர்கள் அடுத்தவர்களைக் கைதூக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பது என்று தீர்மானம் செய்திருந்தோம்...