ஏதோ ஒரு பொது நிகழ்ச்சி. ஒரு ரசிகை யானியிடம் கேட்கிறார். நீங்கள் வாசிக்கும்போது உங்கள் அருகே நான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு பாடலையாவது அப்படி ரசிக்க வேண்டும். உங்களைத் தொடமாட்டேன். தொந்தரவு செய்ய மாட்டேன். வேண்டியதெல்லாம் அருகே அமர ஒரு வாய்ப்பு. யானி முதலில் திகைத்து விடுகிறார். பிறகு வெட்கப்படுகிறார். சிறிது சங்கடமாகிறார். அவர் அடுத்து வாசிக்கவிருக்கும் நாஸ்டால்ஜியா என்னும் பாடலின் ஸ்வரக்கட்டு...
பேட்டை புராணம்
சில நடைமுறை வசதிகளை உத்தேசித்து என் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தேன். குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. சம்பிரதாயங்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் பெற்றோர் உடன் வந்து பால் காய்ச்சி சர்க்கரை போட்டு எனக்கு ஒரு தம்ளர் கொடுத்துவிட்டு அவர்களும் ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு, ‘வீடு நல்லாருக்குடா’ என்று சொன்னார்கள்.[ஆனால் வாடகை அத்தனை நன்றாக இல்லை.] நான் பார்த்திருக்கும் வீட்டுக்கு...