வாழ்வில் நாம் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த சில சந்தர்ப்பங்கள் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மறக்காது. முதலில் ஏமாந்து, பிறகு அது கிடைத்துவிட்டாலுமே ஏமாந்த தருணம் நினைவில் எங்காவது உட்கார்ந்திருக்கும். எனக்கு அப்படிச் சில உண்டு. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய பத்திரிகையில் விளம்பரம் ஒன்று வந்தது. ஒரு தொடருக்கான விளம்பரம். மாலன் எழுதுகிறார் என்றிருந்தது. இரண்டே சொற்களைக்...
என் ஜன்னலுக்கு வெளியே – வெளியீடு
05.01.2009 – திங்கள் [அதாவது நாளை] மாலை 6 மணிக்கு மாலனின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறோம். நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மாலனின் ‘சொல்லாத சொல்’ கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இந்நூலைக் கொள்ளலாம். தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பெரும்பாலும் அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த...