இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது.
fifine K 678 – ஒரு மதிப்புரை
இந்த மைக்கைப் பற்றி வெங்கட் எனக்குச் சொன்னார். ஒலிச் சுத்தம் நன்றாக இருப்பதையும் பயன்பாடு எளிதாக உள்ளதையும் அவரது அலுவலக அறையில் கண்டேன். நாளெல்லாம் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கும் இம்சையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இது நடந்ததால் உடனே அமேசானில் ஆணையிட்டு, இன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு காரணம், ஹெட்போனை மாட்டிக்கொள்ளும்போது கணித் திரையில் நமது மேனி...


