கார்த்திகை ஒளித் திருநாளான இன்று உரியின் முகப்போவியம் வெளியிடப்படுகிறது. எப்போதும் செய்வதுதான். எளிய சடங்குதான். ஆயினும் இந்நொடி மனத்தில் நிறைந்து பரவும் உணர்ச்சிகளை நிதானமாக உற்று நோக்க முயற்சி செய்கிறேன். 2011 ஆம் ஆண்டு என்று நினைவிருக்கிறது. மாதம், தேதி நினைவில்லை. என்றோ ஒருநாள் உறங்கி எழுந்த நேரத்தில் ஒரு பெரும் நாவலுக்கான வித்து மனத்தில் விழுந்தது. தோன்றியபோதே அது ஒரு நாவல் அல்ல; மூன்று...


