உரி – முன்பதிவு அறிவிப்பு

உரி முன்பதிவு தொடர்பாக ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கீழே தருகிறேன்.

பா. ராகவன் இந்த வருடம் முழுவதையும் இந்நாவலுக்கே முழுதாக அளித்துவிட்டார் என்பது அவரது வாசகர்களுக்குத் தெரியும். ஆய்வுக்கு மூன்று வருடங்கள். எழுத ஒரு வருடம். இந்திய மெய்யியல் சார்ந்த அவரது முந்தைய நாவல்களான சலம், யதி இரண்டைப் போலவே ஆழமும் அழுத்தமும் உக்கிரமும் மேலோங்கிய படைப்பாக உரி உருவாகியுள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் வாழும் சித்தாந்தமாக ஆத்திகமும் ஆளும் சித்தாந்தமாக நாத்திகமும் வீரியம் குறையாமல் பன்னெடுங்காலமாகத் தழைத்து வந்திருக்கின்றன. முற்றிலும் நேரெதிரான இவ்விரண்டும் முரண்களைக் கடந்து இம்மண்ணின் அடையாளமானது எப்படி?

உரி, இவ்வினாவின் மீது தன்னைக் கட்டியெழுப்பிக்கொள்ளத் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் ஆழமாக வேரூன்றியதன் பின்னணியில் இராஜராஜ சோழனின் பங்களிப்பு பெரிது. அதே சமயம் வட மாநிலங்களில் இன்றும் புழக்கத்தில் உள்ள தாந்திரிக வழியிலான நரபலிகள், அதனை நிகர்த்த பிற மூடச் செயல்கள் இம்மண்ணில் அறவே ஒழியக் காரணமாக இருந்தவனும், தமிழர்களின் நிரந்தர மதச்சார்பற்ற மனப்பான்மைக்கு வித்திட்டவனும் அவனே.

இராஜராஜனின் பெரும் சாதனை என்பது உண்மையில் இதுதான். ஆனால் ஏனோ இது பெரிதாகப் பேசப்படவேயிலை.

இதுவரை எவரும் அணுகாத இந்த வரலாற்று வெற்றிடத்தை மாயப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு துலக்கிக் காட்டுகிறது இந்நாவல்.

உரி, பாராவின் சலம்-யதி நாவல்களினும் அளவில் மிகப் பெரிது. எட்டு அங்கங்களும் நூற்றுத் தொண்ணூறு அத்தியாயங்களும் கொண்ட இந்நாவல், ராயல் அளவில் 1100 பக்கங்கள் வருகிறது. இதன் முக்கியத்துவத்தையும் வாசகர்களின் வசதியையும் கருதி, கட்டுறுதி மிக்க கெட்டி அட்டைப் பதிப்பாக இதனை வெளியிடவிருக்கிறோம்.

விலை: ரூ. 2000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்)
முன்பதிவுச் சிறப்பு விலை: ரூ. 1400 (முப்பது சதவீதச் சலுகை)
கூடுதல் சலுகை: முன்பதிவு செய்வோருக்குத் தபால் செலவு இலவசம் (இந்தியாவுக்குள் மட்டும்).

இந்த ஆண்டிறுதியை உரியுடன் கொண்டாட வாசகர்களை அன்போடு அழைக்கிறோம். நாவல் டிசம்பரில் வெளியாகும். வெளியாகும் தேதியை விரைவில் அறிவிக்கிறோம்.

முன்பதிவு செய்ய இங்கே செல்லவும்.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி