தென்னிந்தியர்கள் மாவு பிசைவதற்கும் வலது மேலாக்கைத் தலை வரை இழுத்துவிட்ட வட இந்தியப் பெண்மணிகள் மாவு பிசைவதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் மாவு பிசைவதற்கு விரல்களைக் கணிசமாகப் பயன்படுத்துவோம். அவர்கள் சுக்கிர மேட்டால் அழுத்திப் பிசைவார்கள்.
Yathi – A review: Jinapriya AjithaDoss
The scary part comes in last parts. The actual plot. The plot leaves the reader so unsettled. I had to read thrice the last 500 pages to understand the way the knots are unknotted.
அன்பில் ஊறிய தோஷம்
என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது பெரிய விடுதலை. இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் பை-ப்ராடக்டுடன் வரும்.
சலம்: ஒரு மதிப்புரை – கதிரவன் ரத்தினவேல்
சமீபத்தில் கூட ஒருவர் வால்கா முதல் கங்கை வரை புதினத்தை புளுகென்று திட்டிக் கொண்டிருந்தார். ஆரியர்கள் பூர்வகுடிகள் என்பது அவரது வாதம். அவரெல்லாம் சலம் படிக்க வாய்ப்பேயில்லை என நினைத்து ஆறுதல் கொள்கிறேன்.
மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா
இன்று மாலை ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.


