Categoryசிறுகதை

பக்தன்

எப்போதும்போல் ஒழுங்காக இணையத்தில் எழுத முடியாத சூழல். கொல்லும் பணிகள். எனவே அவ்வப்போது ஆவதுபோல் அவ்வப்போது மட்டுமே இப்பக்கம் வர முடிகிறது. இடையே, ஏன் எழுதவில்லை, என்ன ஆயிற்று என்று அக்கறையுடன் தனி அஞ்சலில் விசாரிக்கும் நண்பர்களுக்கு ஒரு சொல்: வேலை அதிகம், வேறொன்றுமில்லை. இதுவும் எப்போதும் போலவே. இடையே வெகுநாள்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுதினேன். இன்று தினகரன் வசந்தத்தில் அது பிரசுரமாகி உள்ளது...

C/O கருவறை

வழியும் சத்தியமும் ஜீவனும் சந்தேகமில்லாமல் நானே தான். வந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போ என்று எம்பெருமான் கூப்பிட்டான். கூப்பிட்ட மரியாதைக்குப் போய்ச் சேர்ந்தபோது பதினெட்டு மணிநேரம் கூண்டுக்குள் காத்திரு என்று திருப்பதி தேவஸ்தானத்தின் எலக்டிரானிக் போர்டு சொன்னது. சுந்தரத் தெலுங்கும் மந்திரத் தமிழும் மற்றும் கொஞ்சம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் கலந்த ஒலிச் சித்திரங்கள் இடைவிடாமல்...

உண்ணி

எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது. கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள். பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை...

சாட்சிக்காரன் குறிப்புகள்

கனவே போலத்தான் இருந்தது. ஒருமுறை கண் இமைத்துத் திறக்கும் நேரத்தில் அவளை நான் கண்டுகொண்டேன். ஞாபகத்தில் பிசகேதும் இல்லை.  ஓட்டல் ஸ்ரீ அருகம்புல் விநாயகா – பிராக்கெட்டில் சுத்த சைவம் – முதலாளி தையூர் வரதராஜு முதலியாரின் இரண்டாவது பெண் பொற்கொடிதான் அவள். பதினெட்டு வயதில் பார்த்தது. பத்து வருஷத்துக்கு உண்டான தோற்றம் சார்ந்த மாற்றங்கள் இருப்பினும் அடிப்படை வார்ப்பு மாறிவிடுமா என்ன...

மகளிரும் சிறுவரும்

அவசரத்தில் கவனிக்கவில்லை. ஏறிய பேருந்தின் முன்புறமே போர்டு இருந்திருக்கும். மகளிரும் சிறுவரும். ஏறும்போதாவது யாரும் எச்சரித்திருக்கலாம். யோவ் பெரிசு, இந்த வயசுல இன்னா தில்லா லேடிஸ் ஸ்பெஷல்ல ஏறுறே என்று எந்த விடலையாவது உரத்த குரலில் கிண்டல் செய்திருக்கலாம். மாநகர இளைஞர்களெல்லாம் திருந்திவிட்டார்கள் போலிருக்கிறது. கண்டக்டர் பேருந்தின் முன்புறம் இருந்ததால் அவரும் பார்க்கவில்லை. அட, உள்ளே...

அபூர்வ சகோதரிகள்

கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான். பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும்...

யாளிமுட்டை

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, ‘படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?’ என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி