விளையாட்டுப் போல இது இரண்டாவது வருடம். மெட்ராஸ் பேப்பர் சார்பில் இந்த வருடம் எட்டு புத்தகங்கள் வெளியாகின்றன. சென்ற ஆண்டு மெட்ராஸ் பேப்பர் அறிமுகம் செய்த பன்னிரண்டு எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்களை வெளியிட்ட ஜீரோ டிகிரி, இவ்வாண்டு ஏழு எழுத்தாளர்களின் எட்டு நூல்களை வெளியிடுகிறது.
ராஜிக் இப்ராஹிம், ந. ஜெயரூபலிங்கம், தி.ந.ச. வெங்கடரங்கன், கோகிலா, கே.எஸ். குப்புசாமி, வினுலா, ரும்மான் – இவர்களெல்லாம் மெட்ராஸ் பேப்பர் இணைய இதழில் எழுதத் தொடங்கி எழுத்தாளர்களானவர்கள். அவரவர் துறையில் ஆகச் சிறந்த முறையில் எழுதும் முனைப்பும் தீவிரமும் கொண்டவர்கள். தொடர்ந்து மெட்ராஸ் பேப்பர் வாசித்து வரும் வாசகர்களுக்கு இவர்களது எழுத்து எத்தனை கூர்மையானது, அடர்த்தியானது என்பது புரியும்.
தமிழ் அபுனைவு உலகில் ஒரு புதிய அலை எழுத்தாளர்களை உருவாக்க இந்தத் தளம் உதவுகிறது என்பது ஒன்றே இதில் என் நிறைவு. இன்னும் பல உயரங்களுக்குச் செல்லவிருக்கும் இந்தப் புதிய எழுத்தாளர்களை மனமார வாழ்த்துகிறேன்.
மெட்ராஸ் பேப்பர் வெளியீடுகளான இந்நூல்களை ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் வாங்கலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.