கல்கியில் வேலைக்குச் சேர்ந்து கையில் சிறிது பணம் பார்க்க முடிந்தபோதுதான் என்னுடைய முதல் ஹீரோ பேனாவை வாங்கினேன். ஆனால் அப்போது என் ஆசை, பார்க்கருக்குத் தாவிவிட்டிருந்தது.
அறுக்கமாட்டாதவன்
எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...


