பொதுவெளியில் அரசியல் பேசாதே.
பொதுவெளியில் கவிதை எழுதாதே.
பொதுவெளியில் இலக்கியம் எடுபடாது.
பொதுவெளியில் தனிப்பட்ட தகவல்கள் கூடாது.
பொதுவெளியில் சண்டை போடாதே.
பொதுவில் எது சார்ந்தும் கருத்து சொல்லாதே.
பொதுவெளியில் அமைதியாக இரு.
பொதுவெளியில் நல்லவனாக மட்டும் இரு.
நீ செத்தால் RIP போட
பொதுவெளியின் புனிதத்தைப்
பேணிக்காப்பது உன் கடமை.
விலகியிருத்தல்
சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன். உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது. முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய...
ரிப்
முன்பெல்லாம் நாளிதழ்களில் என்ன வெளியாகியிருந்தாலும், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் வழக்கம் உண்டு. இதே போலத் தான் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் எதையும் மறு வினா இன்றி நம்பக்கூடிய ஒரு பெரும் கூட்டம் இருந்தது. சினிமா செய்திகள், வதந்திகளைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையில் வெளியானாலுமே அது சரிதான் என்று நினைப்பார்கள். சிறிது படித்தவர்கள்...