எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன்.
எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை
இன்றைய பதிப்புத் துறையில் நான் காணும் மிகப் பெரிய பிரச்னை ப்ரூஃப் ரீடிங். அந்தப் பணி, அதன் மேன்மையை முற்றிலும் இழந்து, சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆண்டுக்குப் பலநூறு தமிழ் நூல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மக்களும் வாங்கிப் படிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சில புத்தகங்கள் விருது பெருகின்றன. சில விற்பனையாகின்றன. நூலக ஆணை இதர...


