விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன். Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள். தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில...
பயிலரங்கம் – சில குறிப்புகள்
writeroom முதல் பயிலரங்கம் இன்று நடந்து முடிந்தது. Free என்று அறிவித்திருந்ததால் ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அந்த விவகாரத்துக்குள் போகக்கூடாது என்று முதலிலிருந்தே கவனமாக ஒதுங்கியிருந்துவிட்டேன். பங்கேற்பாளர்களை என் மனைவிதான் தேர்ந்தெடுத்திருந்தார். என் அக்கவுண்ட் மூலமாகவேதான் அவரும் ஃபேஸ்புக் பார்க்கிறார் என்பதால் நானறிந்த அனைவரையும் அவரும் அறிவார். (என்னைவிட சிறிது நன்றாகவே.)...
எழுத்துப் பயிலரங்கம்
நேற்று பயிலரங்க அறிவிப்பை வெளியிட்டதும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான அளவில் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பங்கு பெற ஆர்வம் காட்டியிருக்கும் அனைவருக்கும் நன்றி. இன்றும் விண்ணப்பிக்கலாம். நேற்று நேரமில்லாததால் சிலவற்றைக் குறித்து விரிவாக எழுத இயலவில்லை. இப்போது எழுதிவிடுகிறேன். 1) நிச்சயமாக இந்தப் பயிலரங்கம் எழுத்தார்வம் உள்ள, புதியவர்களுக்கு மட்டும்தான். நன்கு பழகிய கரங்களுக்கல்ல. 2) கூகுள் விண்ணப்பப்...
புனைவு எழுத்துப் பயிலரங்கம்
தக்ஷிணசித்ரா நிர்வாகத்தினர் நடத்தும் *Langfest2021* இன் ஒரு பகுதியாக, புதிதாகக் கதை எழுத வருவோருக்கு உதவும்படியாக ஒரு பயிலரங்கம் நடத்தித் தரக் கேட்டார்கள். மன்மதக் கலையெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதா? ஆனால் தூண்டிவிட முடிகிறதா பார்க்கலாம். ஜனவரி 30ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 12.30 வரை (9-10.30தான் ராகுகாலம்) zoomல் இது நடக்கிறது. கிருமி இல்லாதிருந்தால் தக்ஷிணசித்ராவிலேயே நடந்திருக்கும்...