வீட்டுக்கு வந்ததும் என் வசம் உள்ள, வையவன் அனுப்பிய பிரதியைத் தேடத் தொடங்கினேன். நெடுநேரம் தேடியும் கிடைத்தபாடில்லை. அப்படி எங்கே வைத்துத் தொலைத்திருப்பேன் என்று தெரியவில்லை. புத்தகங்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுக்குள் இருந்த வரை எந்தப் புத்தகத்தையும் சட்டென்று எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது வைக்க இடமில்லாமல் என் அறையே ஒரு வில்லன் கொடோன் போலாகிவிட்டது.
நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா
ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...