தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன.
மொழி ஆளுமை – வ.உ.சியின் பாரதி நினைவுக் குறிப்புகள்
வ.உ. சிதம்பரம் பிள்ளையின் ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். பிள்ளை இதனை எந்த வருடம் எழுதினார் என்ற குறிப்பு இந்நூலில் இல்லை. அவர் 18.11.1936ல் மறைந்தார். எனவே 1935க்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் என்று வைத்துக்கொள்ளலாம். இன்றைக்கு எண்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூல், நேற்று எழுதப்பட்டது போன்ற தெளிவும் எளிமையும் கொண்டிருப்பது திரும்பத் திரும்ப...
பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்
என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது விடுமுறை தினங்களில் தாத்தா...


