பெரியதொரு மழையைப் போல எனக்கு மகிழ்ச்சி தருவது வேறில்லை. ஆனால் பெரிய மழையை மொத்தமாக இதுவரை ஏழெட்டு முறைதான் பார்த்திருப்பேன். கிராமங்களில் இருந்து முதல் முறை வருபவர்களுக்கு நகரம் எந்தளவு பிரமிப்பையும் பரவசத்தையும் தருமோ, அதைப் போலத்தான் மழை எனக்கு. புயல் மையம் கொண்டிருப்பதாகச் செய்தியில் சொல்லிவிட்டாலே மனத்துக்குள் மேகம் திரளத் தொடங்கிவிடும். அனைத்தையும் மறந்தவிட்டு மழையைக் குறித்து யோசிக்க...
மூன்று விஷயங்கள்
நகரம் நனைந்திருக்கிறது. நல்ல மழை. இடைவிடாமல் மூன்று தினங்களாகப் பெய்துகொண்டிருப்பதால் அனைத்துச் சாலைகளும் குறைந்தபட்சம் கணுக்கால் அளவு நீருக்கு அடியில்தான் இருக்கின்றன. பல இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர். நேற்றைக்குச் சற்று அதிகம். சுரங்கப்பாதைகளெல்லாம் நீச்சல் குளங்கள் போல் ஆகியிருக்கின்றன. மாம்பலத்தை தியாகராயநகருடன் இணைக்கும் அரங்கநாதன், கோவிந்தன் சுரங்கப்பாதைகள் இரண்டும் நிரம்பித்...