சென்னை போன்ற பெரிய நகரங்களில் விலைவாசி உயர்வை உணவகங்களைக் கொண்டு கண்டறிய இயலாது. விலைவாசி அவ்வளவாக உயராத காலங்களிலும் சிறிய அளவிலாவது விலை வித்தியாசங்களைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். எனவே விலைவாசி உயர்வின்போது உணவுப் பொருள்களின் விலையேற்றம் அவ்வளவாக அதிர்ச்சி தராது என்பது இதன் பின்னணியில் உள்ள உளவியல். காய்கறிகளின் விலை – குறிப்பாக வெங்காய விலை உயரும்போது நாளிதழ்களில் அது செய்தியாக வரும்...
மாமி மெஸ்
நாராயணனின் இந்தக் கட்டுரையின் கடைசி வரிக்கு நன்றி. கூகுள் சாட்டில் வழி சொன்ன விதத்தில் சற்று கோயிந்தசாமித்தனம் இருப்பினும், வேகாத மதிய வெயிலில் டிடிகே சாலையின் இப்புறமும் அப்புறமுமாக நடந்து களைத்தாலும் ஒருவழியாக அந்த மெஸ்ஸைக் கண்டுபிடித்துவிட்டேன். சிவசாய் மெஸ். டிடிகே சாலையில் நாரதகான சபாவுக்கு எதிரே மேம்பாலம் தொடங்கும் இடத்தில் நா.கா. சபாவுக்கு எதிர்சாரியில் ஒரு சிறு சந்தில் இருக்கிறது. சந்து...