உரியின் இறுதி அத்தியாயத்தை இன்று மதியம் 1.58க்கு எழுதி நிறைவு செய்தேன். மிகச் சரியாகச் சென்ற ஆண்டு நவம்பரில் இந்நாவலுக்கான ஆய்வு – படிப்புப் பணிகளை முடித்துவிட்டு இதற்கெனச் சில மொழிப் பரிசோதனைகளைச் செய்யத் தொடங்கினேன். யதி சமகால நாவல். மொழி சார்ந்த சவால்கள் ஏதும் அதில் இல்லை. சலம் எழுதும்போது சிறிது சிரமப்பட்டேன். அது நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் சமக்கிருதம் – பாளி (பாலி அல்ல. பாளி...
உரி: சில குறிப்புகள் – 2
நீங்கள் ஒரு சரித்திரக் கதை எழுதுவீர்களா என்னும் வினாவை இதுவரை குறைந்தது பத்து முறையேனும் பேட்டிகளில் எதிர்கொண்டிருப்பேன். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வாசகர்கள் கேட்டதைச் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் மாட்டேன் என்பதற்கு அப்பால் இன்னொரு பதிலைச் சொன்ன நினைவில்லை. என்னால் ஒரு சரித்திரக் கதையை எழுத முடியும் என்று இன்றுவரை நான் நம்பவில்லை. புழக்கத்தில்...


