தமிழ்நாட்டில் ஆன்மிகம் தழைத்ததினும் பக்தி இயக்கம் ஆழமாக வேரூன்றியதன் தோற்றுவாய் இராஜராஜ சோழனின் காலத்தில் உள்ளது. அதை ஏன் அவன் அவ்வளவு முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்தான் என்பதற்குப் பின்னால் இருந்த சமூகத் தேவையும் தொலைநோக்கும் படித்துப் பார்த்தால் யாரையும் திகைப்படைய வைக்கும். பெரும்பான்மைத் தமிழர்களின் இன்றைய மதச்சார்பற்ற மனப்பான்மைக்கு வித்திட்டதும் அக்காலமே.


