சலம் முன்பதிவை நேற்று தொடங்கி வைத்த வாசக நண்பர்களுக்கு நன்றி. ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இயக்குநர் சமுத்திரக்கனி இதன் முன்பதிவுச் சுட்டிகளை வெளியிட்டு வாழ்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது.
சர்வநாச பட்டன் – 10
அதிகாரம் 10: உறவினர் 1. எனது ஸ்பாம் ஃபோல்டருக்கு ரிலேடிவ்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் செலக்ட் ஆல், டெலீட் பொத்தானை அமுக்கும்போதெல்லாம் அப்படியொரு ஆனந்தப் பரவசம் உண்டாகிவிடுகிறது. 2. என் அனுமதி இன்றி என்னைச் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி, மாப்ள, மச்சான், சகலை, தாத்தா, பேராண்டி என்றெல்லாம் அழைக்க எவன் எவனோ எவன் எவனையோ பெற்றுப் போட்டுவிட்டிருக்கிறான். இதெல்லாம் மனித...
சர்வநாச பட்டன் – 4
அதிகாரம் 4: காதல் நவீன காதல் என்பது திருமணத்தை உத்தேசிக்க வாய்ப்பில்லை. ஆனால் விவாகரத்தை அது இரு கரம் தட்டி வரவேற்கும். சிறந்த காதலர்கள் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள். காதலை வாழவைக்க வேறு நல்ல உபாயமில்லை. போயும் போயும் இவனை (அல்லது இவளை)க் காதலித்தோமே என்று தோன்றும்போதுதான் மேற்படியார்கள் கவிதை எழுத ஆரம்பிக்கிறார்கள். இது குழந்தைகள் மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆசனவாயில் வெற்றிலைக் காம்பைச்...
சர்வநாச பட்டன் – 3
அதிகாரம் 3: பதிவர் சிறந்த பதிவரை இனம் காண்பது எப்படி? அனைத்து பக்கெட், டேக்சா சேலஞ்சுகளிலும் தன் இருப்பைச் சொல்லி, ஹேஷ் டேக் இட்டு டிரெண்டிங்குகளில் பங்களித்து, அவ்வப்போது செல்ஃபி போட்டு, சுதந்திர தினத்துக்கு ப்ரொஃபைலில் தேசியக் கொடி வைத்து, மோடி வரும்போது கோபேக் சொல்லி, மாதக் கடைசி ஆனால் ஃபேஸ்புக்கிலிருந்து விலகலாம் என்றிருக்கிறேன் என்று ஸ்டேடஸ் போட்டு, மறு நாள் காலை, இனிய காலை வணக்கம்...
சர்வநாச பட்டன் – 2
அதிகாரம் 2: கடவுள் ஆத்திகனாக இருப்பதற்குக் கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஹவுஸிங் லோன் இருந்தால்கூடப் போதும். அடி பிடித்த தோசைக்கல்லையும் ஆண்டவனையும் விளக்க நினைப்பது நேர விரயம். அப்படியே தண்ணி தெளித்து சுரண்டிவிட்டு, மாவை ஊற்ற வேண்டியதுதான். மருத்துவர்கள் தெய்வத்துக்குச் சமம். மெடிக்கல் இன்சூரன்ஸ், பெண் தெய்வத்துக்கே சமம். மெய் வருத்தாமல் கூலி தரும் ஒரு கடவுளைத்...


