இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்திருக்க வேண்டிய – தெய்வாதீனமாகத் தப்பித்த – சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன். இதில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழைகள், சொற்றொடர் அமைப்புச் சிக்கல்கள் எதற்கும் நான் பொறுப்பில்லை. புத்தகம் முழுவதுமே ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வைத் தந்தது என்பதை அவசியம் குறிப்பிட விரும்புகிறேன்...
மானம் போகும் பாதை
உலகிலேயே மிகவும் கஷ்டமான காரியம் எது? என்னைக் கேட்டால் காய்கறி வாங்குவதுதான் என்று சொல்வேன். இது அத்தனை துல்லியமான பதில் இல்லை. இன்னும் சரியாகச் சொல்லுவதென்றால் மனைவி குறை கண்டுபிடிக்காதபடிக்குக் காய்கறி வாங்குவது. திருமணமாகி ஒரு முழு வனவாசகாலம் கடந்துவிட்ட பிறகும் இந்தக் கலையில் நான் ஒரு பெரிய இந்திய சைபர் என்பது என் மனைவியின் தீர்மானம். அநேகமாக இதைப் படித்துக்கொண்டிருக்கும் அத்தனை உத்தமோத்தமக்...
எத்தனைக் கோடி இம்சை வைத்தாய்!
பொதுவாக எனக்கு டாக்டர், மருந்து, இஞ்செக்ஷன் என்றால் கொஞ்சம் அலர்ஜி. குறிப்பாக அவர் என்னத்தையாவது எழுதிக்கொடுத்து போய் டெஸ்ட் எடுத்துக்கொண்டு வா என்று சொல்லிவிடுவாரேயானால் குலை நடுங்கிப் போய்விடும். எதோ நாம்பாட்டுக்கு எம்பெருமானே என்று இருக்கிற ஜோலியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம், டெஸ்ட் எடுக்கிறேன் பேர்வழி என்று வாங்கும் பணத்துக்கு வஞ்சனையில்லாமல் கச்சாமுச்சா இங்கிலீஷில் கண்ட வியாதி வெக்கைகளைக்...
ஜெய் ஸ்ரீராம்!
சோவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் துக்ளக்குக்கும் எனக்கும் சில ஜென்மாந்திரத் தொடர்புகள் உண்டு. தில்லி சுல்தான் துக்ளக். தன் வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறைக்குமேல் அவர் தலைநகரை மாற்றியதில்லை. ஆனாலும் ஏனோ அந்த ஜீவாத்மாவை நினைவுகூரும் போதெல்லாம் எப்பப்பார் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறவர் என்று நமக்குத் தோன்றிவிடுகிறது. எல்லாம் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் சதி...
சூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்?
நான் திரும்பத் திரும்ப வாசிக்க விரும்பும் புத்தகங்களுள் ஒன்று பொன்னியின் செல்வன். சினிமாவில் இருப்பவர்கள், சினிமாவின்மீது ஈர்ப்பு இருப்பவர்கள் இரு தரப்புக்கும் இது ஒரு விசேஷமான கதை. லட்சக்கணக்கான வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக ரசித்துவரும் படைப்பு என்பது உண்மையே. ஆனால் சினிமா பிரியர்களுக்கு இது ஒரு தீராத வியப்பளிக்கும் கதை. காரணம், இதைவிடச் சிக்கலான ஒரு கதையை, இதைவிட நேர்த்தியாகத் திரைக்கதை வடிவில்...


