கண்ணி

சில விஷயங்களில் எளிதாக முடிவெடுக்க முடிவதில்லை. ஒரு பொறுப்பின் கண்ணிக்குள் சிக்கிக்கொள்ளும்போது இது இன்னும் சிரமமாகிறது. கட்டற்ற தனி மனித சுதந்தரம் என்பது எப்போதும் திருமணத்துக்குப் பிறகு திரும்பக் கிடைக்கப் போவதில்லை. செய்வதற்கு ஒன்றுமில்லை. இதையும் உள்ளடக்கியதாகவே வாழ்க்கை இருக்கிறது.

எதையும் தொடங்கும் முன்னால் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். முன்பேகூடச் சொல்லியிருக்க முடியும்தான். அறிவை விஞ்சிய தயக்கத்துக்குப் பணிய வேண்டியதாகிவிட்டது. தனக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும் பல விஷயங்கள் சமூகத்துக்குப் பெரும் பிரச்னையாக இருந்துவிடுகின்றன. எப்போதும் எல்லாவற்றிலும் இப்படி ஆகிவிடுகிறது. திருமணம் வேண்டாம் என்று சொன்னதை அப்பாவும் அம்மாவும் எவ்வளவு கொடூரமாக எதிர்கொண்டார்கள் என்பது நினைவுக்கு வந்தது. அம்மாவுக்குக் கண்ணீர் ஆயுதம். அப்பாவுக்கு வெறுப்பில் நனைத்த பார்வை ஆயுதம். ஒரே பெண். உன்னைப் பெற்றதற்கு நாங்கள் பிள்ளை இல்லாமலேயே இருந்துவிட்டுப் போயிருக்கலாம் என்று முத்தாய்ப்பு வைத்துத்தான் திருமணம் பேசி முடித்தார்கள்.

இனி அதைக் குறித்து வருந்திப் பயனில்லை. அவனிடம் சொல்ல வேண்டும். மிச்சமிருப்பது அதுதான்.

முதலிரவு அறைக்குள் நுழைந்தவுடன் ஆரம்பித்தாள். ‘உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.’

‘இரு. கல்லூரி நாள்களில் நான் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறேன். வீட்டுக்கு பயந்து அதைத் தொடரவில்லை. அதே போன்ற ஒன்றுதான் என்றால் எனக்கு அது பிரச்னை இல்லை.’

‘இல்லை. இது வேறு.’

‘அப்படியா?’

‘ஆம். சில காலம் நான் ஒருத்தியுடன் உறவில் இருந்திருக்கிறேன்.’

என்ன என்று திரும்பக் கேட்டான். நெடுநேரம் யோசித்துவிட்டு, ‘இதை நீ முன்பே சொல்லியிருக்கலாம்’ என்று சொன்னான்.

‘தவறுதான். என் பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்கள்.’

பிறகு ஒன்றும் பேசவில்லை. அவன் உறங்கிவிட்டான். கண் விழித்தபோது சிரித்த முகத்துடன் காலை வணக்கம் சொன்னான். பிறகு, ‘என்னிடம் சொன்னதை வேறு யாரிடமும் சொல்லாதே. என் அப்பா அம்மாவாலும் தாங்க முடியாது’ என்றான்.

Share

44 comments

  • பாராவின் கண்ணியில் இது சிக்கலான உறவு ஒத்து கொள்ள மனமில்லை!!

    இதுவும் கடந்து போகும்!! இது தானே வாழ்க்கை!!

  • எண்ணம் எப்படியோ- அப்படியே அமையும். விரும்பமில்லா ஒன்றை ஒருவருக்கு மற்றவர்கள் செய்து வைக்கும் போது அப்படியே அமைந்துவிடுகிறது.

  • //பிறகு ஒன்றும் பேசவில்லை. அவன் உறங்கிவிட்டான்.//
    இந்த இரு வரிகளில் பல்வேறு விஷயங்களை கூறாமல் கூறி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
    முதலிரவில் நடக்கவேண்டிய ஒன்றும் நடக்கவில்லை. பிறகும் எப்போதுமே கூட நடக்கவேண்டியது நடக்காது. ஆனாலும் சிரித்த முகத்தோடு திடமாக அதை எதிர்கொள்ளும் ஒரு ஆண்.
    அவனுக்கும் அவன் பெற்றோர் பற்றிய கவலை உண்டு.
    கண்ணி – மிகப் பொருத்தமான தலைப்பு.
    கூடவும் வாழ்வது கடினம். தள்ளிப்போனால் துன்பம் நிச்சயம்.

  • துணிச்சலான பெண் தான் கணவனிடம் தன் ஓரின உறவைப் பற்றி சொல்ல முடியும். அதையும் தன் தாய் தந்தையருக்காக வெளிப்படுத்தாத கணவன் நிலை பரிதாபத்திற்கு உரியது.

  • பாம்பு சாகவும் இல்லை.
    கம்பு ஒடியவுமில்லை

  • நல்ல கதை. உண்மையில் இக்கதையில் மறைந்திருக்கும் கண்ணி கணவனின் கடந்த காலம்தான் என நினைக்கின்றேன். கடைசி பத்தியும் அதையே காட்டுவதாகப் பார்க்கிறேன்.
    குறிப்பாக , “என்னிடம் சொன்னதை வேறு யாரிடமும் சொல்லாதே. என் அப்பா அம்மாவாலும் தாங்க முடியாது” என்று கணவன் சொல்லும் போது தெரிகிறது. அங்கு அவளுக்கு நடந்ததுதான் இங்கு இவனுக்கும் நடந்துள்ளது..

  • ஓரின உறவு என்ற கண்ணியில் சிக்கிய பெண்ணின் நிலையைச் சிந்தித்து மௌனமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அந்த ஆணுக்கு இருந்தது ஆச்சரியமாக இல்லை. ஆனால் அதைக் கணவனிடம் அந்தப் பெண் வெளிப்படுத்தியதுதான் ஆச்சரியமாக இருந்தது.

  • கண்ணி !உறவுச்சிக்கல் அல்ல, நட்பு !
    Super sir.

  • நீங்கள் எழுதிய இறுதிச்சுற்று சிறுகதையை நினைவுப்படுத்தியது இந்த்க் குறுங்கதை

      • இரு கதைகளும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பானவை என்பது மட்டுமே ஒற்றுமை. கதை வேறு வேறு அல்லவா?

  • //இரு. கல்லூரி நாள்களில் நான் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறேன். வீட்டுக்கு பயந்து அதைத் தொடரவில்லை. அதே போன்ற ஒன்றுதான் என்றால் எனக்கு அது பிரச்னை இல்லை.
    …..
    இதை நீ முன்பே சொல்லியிருக்கலாம்.//

    நான் மிகவும் ரசித்த பகுதி

  • அவன் செய்த அதே தவறை அவளும் செய்து அதை அவன் மன்னித்தால் பெரிய விஷயமில்லை. இதுவே அவன் செய்யாத தவறை அவள் செய்து அதை பெருந்தன்மையாய் மன்னித்து ஏற்றுக் கொண்டால் அது தெய்வம் மனுஷ ரூபனே!

    • Compare a human life with our universe ,especially the age of 26-27 to nearly up to the age of 50,
      it is only max. of 25 years.So try to spent the period as much as pleasant ,peaceful and happy.
      Always be cheerful and smile. FORGIVE AND FORGET ALL MISTAKES WHAT WE CROSSED IN THIS CARRIER.

  • ஓரினச்சேர்க்கை பற்றி கூறும் அவளது தைரியமும் அதை ஏற்று கொண்ட அவனது மனமும் இப்படி ஒரு கதையை சிந்தித்த ஐயா பாரா அவர்களுக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

  • திருமணம் எல்லோருக்குமே கண்ணி தான் என்றாலும், தன் தவறு துணைக்கு தெரிந்த பின் திருமண பந்தம் தொடர்ந்தால்…. அது தான் நிஜமான கண்ணி

  • முதல் பாரா ,பா ராவின் அக்மார்க் எழுத்து.
    தவறில்லை என்று நினைத்தால் முன்பே சொல்லியிருக்கலாம். இன்னொருத்தருக்கு வாழ்வு முழுமைக்குமான தண்டனையாகி விடுமல்லவா. சரி… இதுதான் கதை.. என்றாலும், இதெல்லாம் சாதாரணம் என்று முன்பு தோன்றியதை “தவறுதான்” என அவள் கூறுவது நெருடலாக இருக்கிறது.

    • முன்பே சொல்லாமல் தவிர்த்ததைத்தான் தவறு என்கிறாள்.


      ‘இதை நீ முன்பே சொல்லியிருக்கலாம்’ என்று சொன்னான்.

      ‘தவறுதான். என் பெற்றோருக்குத் தெரிந்தால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்கள்.’

  • கதை சிரியதுதான்
    சொல்லப்பட்டிருக்கும்
    விசயம் ரொம்ப பெரிது.

  • இதை அவள் தன் அம்மாவிடம் சொல்லி இருந்தால் , சரிடி , அதெல்லாம் மறந்துடடு இனி கணவனுடன் சந்தோஷமா இரு. கணவனிடமோ அப்பாவிடமோ சொல்லாதே . ஆண்களால் இதை தாங்க முடியாது என அம்மா சொல்லி இருப்பாள். அப்பாவிடம் சொல்லி இருந்தால் , கணவனுக்கு தெரிய வேண்டாம் , அம்மாவிடம் ரகசியம் தங்காது. அவளிடமும் சொல்லாதெ என சொல்லி இருப்பார். தனிமனிதனாக அனைவரும் பெருந்தன்மையானவரே. சமுதாயக்கண்ணியில் சிக்கும்போது அவர்கள் ரெஸ்பான்ஸ் மாறுகிறது என்பதை அழகாக சொல்கிறது கதை.

    • கதைக்கான உங்கள் விமர்சனம் அருமை.. உறவுக்கண்ணிகளின் சிக்கல் சமுதாயத்தின் அழுத்தத்தால் அதிகமாகிறது.

  • எதிர்”பா ரா” திருப்பம்.. அருமை.

  • // என் அப்பா அம்மாவாலும் //

    மாஸ்டர்க்ளாஸ் பாராஜி.

  • கண்ணி என்ற தலைப்பிற்குள் சிக்கிக் கொண்டதால் குறுங்கதையாக படுகிறதே தவிர, இது ஒரு சிறுகதை அல்லது தொடர்கதைக்கான தொடக்கமே. ஒரு பெண்ணின் ஓரினச் சேர்க்கை உறவை முதலிரவு காட்சியில் சொல்லி முடிதிருப்பது நையாண்டி பார்வையாகவும் படுகிறது.

  • அறிவை விஞ்சும் தயக்கம்…. மிக யதார்த்தமான மற்றும் ஆழமான வரி

  • அந்த நானும் ஒருத்தியும் உறவில் இருந்தோம் என்றதும் திரும்ப ஒருமுறை படித்தேன் அருமை

  • விதைத்ததை அறுவடை செய்கிறான் அவன்… கன்னி என்று எண்ணியவனுக்கு கண்ணி

  • இது pride month. பாலினம் இரண்டு தான். ஆனால் ஒரு வெள்ளை ஒளி பல அலை கற்றாக பிரிந்து பல வண்ணங்களால் நிரம்பி இருப்பதை போல தான் இந்த உடலும் மனமும். இது நம் பரிணாமத்தின் அடுக்குகளின் வெளிப்பாடேயன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

  • யதியை படித்த என்னால்,இந்த துணுக்கு தோரணங்களை சீரணிக்கமுடியவில்லை.

  • கண்ணி நச்சுனு இ௫ந்தது,முடிவு அருமை. யதி படிக்க ஆரம்பித்தது இருக்கின்றேன்.

  • எவ்வளவு பெரியமனம் கொண்டவனாக இருந்தாலும், குறைந்தபட்சம் ‘இனிமேல் வேண்டாம்’ என்றுகூட சொல்லவில்லையா !

    கதைகள் முடியும் இடத்தில் உண்மை வாழ்க்கை தொடங்குவதாக சொல்வது நினைவுக்கு வருகிறது.

    சி.நே.சி.ம. மாதிரி இந்தக் கதை தொடர்ச்சியாக ஒரு நாவலுக்கு இடம் தரக்கூடியதாக இருக்கலாம்.
    (கதையில் முதல் பாராவின் பங்கு என்ன என்பது புரியவில்லை.)

  • எதிர்பார்த்தது வேறு..
    நடந்துது எதிர் `பா ரா’ தனது…

    • எதிர்பார்த்தது வேறு….
      நடந்தது எதிர் `பா ரா’ தது….

  • Our guys do not tolerate his wife relationship with a Male but this is different and there was no penetration for the lesbians. So most of them will agree for some extend.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!