கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 29)

தோழிகள் இருவரும் சேர்ந்து கோவிந்தசாமியின் நிழலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். பாவம் காதல் அதன் கண்ணை மறைத்துவிட்டது. அவர்களது விருப்பத்திற்கெல்லாம் ஆடிக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் சூனியன் தன் குழுவோடு நீலவனத்தில் இருக்க, இன்னொரு பக்கம் இவர்கள் இருவரும் கோவிந்தசாமியின் நிழலை அழைத்துக்கொண்டு நீலவனத்திற்கு பயணம் செய்கின்றனர்.
நீலவனத்தில் எவர் வேண்டுமானாலும் தனக்கான சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டு அரசாளலாம் என்று ஒரு நிலை இருப்பதால் அப்படி ஒரு சக்கரவர்த்தியாக அவனை உருவாக்க திட்டமிட்டு விட்டனர். தனக்கான அடையாளமே கோவிந்தசாமிதான் என்று இருந்தவனுக்கு ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என்றதும் பெருமை தாங்கவில்லை.
நீலவனம் என்ன என்பதை என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. அவை முகநூலில் இருக்கும் குழுக்கள்தாம் என நினைக்கிறேன். அதன் அட்மின்கள்தான் வனத்தின் குறிப்பிட்ட பகுதியின் சக்கரவர்த்திகள்.
அதில் ஒரு குழுவில் நூலகம் என்ற பெயரில் pdf புத்தகங்களை சட்டவிரோதமாக பகிர்கிறார்கள். அதனைத்தான் நீலவனத்தின் நூலகம் என குறிப்பிடுகிறார் போலிருக்கிறது.
நீலவனத்தில் இரண்டு குழுக்களும் சந்திக்கப் போகின்றன. என்ன நிகழப் போகிறது என்பது வரும் அத்தியாயங்களில் தெரியும்.
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி