குறுவரி

சர்வநாச பட்டன் – 1

அதிகாரம் 1: சக மனிதன்

  1. நூறு நல்லவர்களை என்னிடம் தாருங்கள். நூறு பேருமே ஃப்ராடு என நான் நிரூபிக்கிறேன்.
  1. ஓ! மனிதன் எத்தனை சிறந்த கமிஷன் ஏஜெண்ட்!
  1. நல்ல மனிதர்கள் என்று யாருமில்லை. எல்லோருமே சுமாரான அசெம்பிள்டு செட்தான்.
  1. மனித குலத்தின் ஆகப் பெரிய பிரச்னை, அன்பு நிறைந்து பொங்கி வழிவது போல அவ்வப்போது காட்ட வேண்டி இருப்பதுதான்.
  1. ஆண்டவா, உறவுக்காரர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. சக மனிதனை நான் பார்த்துக்கொள்கிறேன்.
  1. மனிதம் மரித்துவிட்டது என்று யாராவது சொல்லும்போது புல்லரித்து விடுகிறது.  காட்டிக்கொள்ளாமல்,  முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு “ரிப் ப்ரோ!” என்று சொல்லிவிட்டுப் போகிறேன்.
  1. சக மனிதன் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லாதீர்கள்.  சக அயோக்கியன், சக ஃப்ராடு என்று குறிப்பாகச் சொல்லப் பழகும்போதுதான் மனித குலம் அச்சங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டதாகக் கருதப்படும்.
  1. கொட்டும் மூத்திரம் தராத உருக்கத்தைச் சொட்டும் கண்ணீர் தந்துவிடுகிறது. கம்மியில் கெத்து காட்டும் சாமர்த்தியம் சக மனிதனுக்கு மட்டுமே உண்டு.
  1. நான் ஒரு உலகத் தரமான அவநம்பிக்கைவாதி ஆகிக்கொண்டிருக்கிறேன். எல்லாப் புகழும் சக மனிதனுக்கே.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி