எனக்கு தாடி வைத்துக்கொள்ளப் பிடிக்கும். தாகூர், ஓஷோ, டால்ஸ்டாய் போன்ற பலரை தாடியைக் கொண்டே முதலில் நெருங்கினேன். படைப்பு அறிமுகமெல்லாம் பிறகுதான். ஆனால் என்ன காரணத்தாலோ, என்னால் நான் விரும்பிய வண்ணம் தாடி வளர்க்க முடிந்ததில்லை. கருகருவென தாடி வளர்ந்த காலத்தில் வீட்டில் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் போல இருந்த காலத்தில் எனக்கு வேலை கிடைத்துப் போகத் தொடங்கவேண்டியதானது. கல்கியில்...