எண்ணெய் எடுக்கிறார்கள் எரிவாயு எடுக்கிறார்கள் கனிமங்கள் தனிமங்கள் சேர்மங்கள் ஏராளமாக எடுக்கிறார்கள் பார் பார் நீருக்கடியில் தடம் விரித்து புல்லட் ரயில் விடுகிறார்கள் உற்றுப் பார் உவர் நீரை நன்நீராக மாற்றிக் குடிக்கக் கொடுக்கும் திட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது நம் மாநிலத்திலேயே. ஒன்றுமில்லாவிட்டாலும் அள்ளிக்கொள்ள எப்போதும் உள்ளது உப்பும் மீன்களும் முத்தும். எடுக்கப் போனால் எதையாவது கொடுப்பது...
சாலைக் கவிதை
எல்லா சாலைகளிலும் ஏதோ பணி நடக்கிறது எல்லா சாலைகளையும் ஒருவழி ஆக்கியிருக்கிறார்கள் எல்லா சாலைகளிலும் பாதி தொலைவில் பாதை மாற்றி விடுகிறார்கள் போக வேண்டிய இடத்துக்கு நேரெதிர் திசையில் நெடுந்தூரம் சுற்றிக்காட்டிவிட்டு எல்லா சாலைகளும் எங்காவது கொண்டு சேர்த்துவிடுகின்றன முடிவற்ற பெருஞ்சுவராக நீளும் நீலத் தகடுகள் எல்லா சாலைகளையும் இரண்டாகப் பிளக்கின்றன தகடுக்கு மறுபுறம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்...
பொதுவெளி
பொதுவெளியில் அரசியல் பேசாதே.
பொதுவெளியில் கவிதை எழுதாதே.
பொதுவெளியில் இலக்கியம் எடுபடாது.
பொதுவெளியில் தனிப்பட்ட தகவல்கள் கூடாது.
பொதுவெளியில் சண்டை போடாதே.
பொதுவில் எது சார்ந்தும் கருத்து சொல்லாதே.
பொதுவெளியில் அமைதியாக இரு.
பொதுவெளியில் நல்லவனாக மட்டும் இரு.
நீ செத்தால் RIP போட
பொதுவெளியின் புனிதத்தைப்
பேணிக்காப்பது உன் கடமை.
அபாயகரம் – ஒரு மதிப்புரை (விவேக் பாரதி)
‘அன்பின் பாராவுக்கு,’ நாடறிந்த (நாட்டை அறிந்த, நாடு அறிந்த) எழுத்தாளர் பாராவுக்கு அனேகமாக வரும் கடிதங்கள் எல்லாம் இப்படித்தான் தொடங்கும். அதனால் நானும் அப்படியே தலைப்பிட்டேன். சற்று வித்தியாசமான இந்த நூல்நோக்கம் 2 நூல்களைப் படித்துக்கொண்டு வந்து முன்னால் போடுகிறது. இரண்டுக்குமான கைகள், பாராவுடையது. தீவிர இலக்கியவாதி, இலக்கியத் தீவிரவாதி, நாவல் உலகின் நாவல்பழம் உள்ளிட்ட பல அடைமொழிகளால்...
பாடுபொருள்
என்னிடம் உள்ள நூற்றுக் கணக்கான கெட்ட பழக்கங்களுள் ஒன்று, பிறகு பார்க்கலாம் என்று தள்ளி வைப்பது. எதையெல்லாம் அப்படித் தள்ளி வைக்கிறேனோ, பெரும்பாலும் அது பிறகு நடப்பதே இல்லை. இந்தத் தள்ளிப் போடுவதில் முதன்மையானது, யாரையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து, அதைத் தள்ளிப் போடுவது. சென்ற சென்னை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் கண்காட்சியில் இருந்து விரைவாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்...