ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும்...
Bukpet-WriteRoom: எழுத்துப் பயிற்சி வகுப்புகள்
விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன். Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள். தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில...
புனைவு எழுத்துப் பயிலரங்கம்
தக்ஷிணசித்ரா நிர்வாகத்தினர் நடத்தும் *Langfest2021* இன் ஒரு பகுதியாக, புதிதாகக் கதை எழுத வருவோருக்கு உதவும்படியாக ஒரு பயிலரங்கம் நடத்தித் தரக் கேட்டார்கள். மன்மதக் கலையெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதா? ஆனால் தூண்டிவிட முடிகிறதா பார்க்கலாம். ஜனவரி 30ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 12.30 வரை (9-10.30தான் ராகுகாலம்) zoomல் இது நடக்கிறது. கிருமி இல்லாதிருந்தால் தக்ஷிணசித்ராவிலேயே நடந்திருக்கும்...