புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் என்னென்ன முக்கியம் என்று நண்பர்கள் சிலர் மின்னஞ்சலில் கேட்டார்கள். உண்மையில் எனக்கு இன்னும் முழு விவரம் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் சில வெளியீட்டு அழைப்பிதழ்கள், புத்தக மதிப்புரைகளின்மூலம் ஒன்றிரண்டு நூல்களைத்தான் குறித்து வைத்திருக்கிறேன். ஒன்றிரண்டு தினங்களில், புதிதாக வருகிற நூல்களுள் எனக்கு முக்கியமாகப் படுபவை குறித்து எழுதுகிறேன்.
அதற்குமுன்னால், என் நிரந்தர விருப்பத்துக்குரிய நூல்களின் பட்டியல் ஒன்றை இங்கே தருகிறேன். நாவல், சிறுகதை, வாழ்க்கை, அரசியல், கவிதை என்று கலந்து கட்டி இருக்கலாம். வகைப்படுத்தவில்லை. ஆனால், வாசிப்பு ஆர்வம் உள்ள அனைவரும் இந்நூல்களைத் தவறவிடாமல் இருப்பது நல்லது. இவற்றுக்கு அப்பாலும் நல்ல புத்தகங்கள் அநேகம் உண்டு. ஆயினும் என் முதல் விருப்பம் – சிபாரிசு இவையே.
1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]
3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்
4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்
5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்
6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்
7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]
9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]
10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
12. சிந்தா நதி – லா.ச. ராமாமிருதம்
13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்
14. பொன்னியின் செல்வன் – கல்கி
15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா
16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு – இரண்டு பாகங்கள்]
17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]
18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்
19. எனது சிறைவாசம் – அரவிந்தர்
20. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே. செட்டியார்
21. ஒற்றன் – அசோகமித்திரன்
22. நிலா நிழல் – சுஜாதா
23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு
25. அவன் ஆனது – சா. கந்தசாமி
26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்
27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்
28. வ.ஊ.சி. நூற்றிரட்டு
29. வனவாசம் – கண்ணதாசன்
30. திலகரின் கீதைப் பேருரைகள்
31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்
32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர்
33. காமராஜரை சந்தித்தேன் – சோ
34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்
35. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன்
36. ராமானுஜர்(வாழ்க்கை வரலாறு) – ராமகிருஷ்ண மடம் வெளியீடு
37. பாரதியார் வரலாறு – சீனி விசுவநாதன்
38. இந்திய சரித்திரக் களஞ்சியம் – ப. சிவனடி
39. ஆதவன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]
40. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]
41. பட்டாம்பூச்சி – ஹென்றி ஷாரியர் : மொழிபெயர்ப்பு – ரா.கி. ரங்கராஜன்
42. சுபமங்களா நேர்காணல்கள் – தொகுப்பு: இளையபாரதி
43. பாரதி புதையல் பெருந்திரட்டு – ரா.அ. பத்மநாபன்
44. காந்தி – லூயி ஃபிஷர் : தமிழில் தி.ஜ. ரங்கநாதன்
45. பாரதியார் கட்டுரைகள்
46. நானும் இந்த நூற்றாண்டும் – வாலி
47. பண்டைக்கால இந்தியா – ஏ.கே. டாங்கே
48. குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
49. பயணியின் சங்கீதம் – சுகுமாரன்
50. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
51. God of small things – அருந்ததிராய்
52. Midnight’s Children – சல்மான் ருஷ்டி
53. Moor’s lost sigh – சல்மான் ருஷ்டி
54. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி
55. Train to Pakistan – குஷ்வந்த் சிங்
56. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் – சி.புஸ்பராஜா
57. All the president’s men – Bob Woodward
58. மதிலுகள் – பஷீர் [நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு மட்டும்.]
59. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன்
60. If I am assasinated – ஜுல்பிகர் அலி புட்டோ
61. Courts and Judgements – அருண்ஷோரி
62. மோகமுள் – தி. ஜானகிராமன்
63. ஜனனி – லா.ச. ராமாமிருதம்
64. பஞ்சபூதக் கதைகள் – லா.ச. ராமாமிருதம்
65. கி.ராஜநாராயணன் கதைகள் [முழுத்தொகுப்பு]
66. அசோகமித்திரன் கட்டுரைகள் [இரண்டு பாகங்கள்]
67. இரா. முருகன் கதைகள் [முழுத்தொகுப்பு]
68. ஜீரோ டிகிரி – சாரு நிவேதிதா
69. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
70. ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வு – டி.ஆர். கார்த்திகேயன்
71. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா
72. குட்டியாப்பா – நாகூர் ரூமி
73. சார்லி சாப்ளின் கதை – என். சொக்கன்
74. Made in Japan – அகியோ மொரிடா
75. வைரமுத்து கவிதைகள் [முழுத்தொகுப்பு]
76. India after Gandhi – ராமச்சந்திர குஹா
77. இரும்புக் குதிரைகள் – பாலகுமாரன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. காற்றில் கலந்த பேரோசை – சுந்தர ராமசாமி
80. புலிநகக் கொன்றை – பி.ஏ. கிருஷ்ணன்
81. கொரில்லா – ஷோபா சக்தி
82. ஸ்… [அண்டார்டிகா] – முகில்
83. அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம்
84. முத்துலிங்கம் கதைகள் [முழுத்தொகுப்பு]
85. தீ – எஸ். பொன்னுத்துரை
86. சடங்கு – எஸ். பொன்னுத்துரை
87. வரலாற்றில் வாழ்தல் – எஸ். பொன்னுத்துரை
88. காந்திஜியின் இறுதி 200 நாட்கள் – வி. ராமமூர்த்தி
89. இஸ்தான்புல் – ஓரான் பாமுக்
90. A House for Mr Biswas – வி.எஸ்.நைபால்
91. Half a Life – வி.எஸ். நைபால்
92. ராஜு ஜோக்ஸ்
93. பிரம்ம ரகசியம் – ர.சு. நல்லபெருமாள்
94. அதர்வ வேதம்
95. இலியட் – தமிழில்: நாகூர் ரூமி
96. சிந்திக்கும் நாணல் – மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும் – எஸ்.வி. ராஜதுரை
97. புயலிலே ஒரு தோணி / கடலுக்கு அப்பால் – ப. சிங்காரம்
98. Muhammad : His Life Based on the Earliest Sources – மார்ட்டின் லிங்ஸ்
99. சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் – முகில்
100. நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி? – எம்.ஆர். காப்மேயர்
Thanks a lot for the list.
நீங்கள் கூறியவற்றில் 20 படித்துள்ளேன்.
இறுதியாக படித்தது உடல் மண்ணுக்கு (In the Line of Fire: A Memoir – Pervez Musharraf – மொழிபெயர்ப்பு – நாகூர் ரூமி). இந்த புஸ்தகத்தையும் உங்கள் லிஸ்டில் சேர்த்திருக்கலாம். இது என்னை மிகவும் பாதித்த புஸ்தகம், ஏனெனில் இதுவரை இந்தியா, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்வையும் நாம் இந்தியாவின் கண்ணோட்டத்தில்தான் பார்த்திருக்கின்றோம், முதன் முறையாக அதே நிகழ்ச்சிகள் (கார்க்கில், மற்றும் போர்) பாகிஸ்தான் கண்ணோட்டத்தில். படிக்க வித்தியாசமாக இருந்தது – ஒரே நிகழ்ச்சி – ஒரு பார்வைகள் – விருமாண்டி திரைக்கதை மாதிரி.
-ஒருவாசகன்
ஆங்கிலப் புத்தகங்களை ஒதுக்கிவிட்டு தமிழுக்கு மட்டும் பட்டியல் போட்டிருக்கலாம்.
#66 – அ.மி. கதைகள் அளவு, இந்தத் தொகுப்பு என்னை ஈர்க்கவில்லை; சரித்திர ஆவணம் மாதிரியும் தென்படவில்லை.
#94 – செம போர் 🙂
#99 – டூ மச். படித்துப் பார்த்தேன். வண்ணத்திரை தொகுப்பு மாதிரி இருந்தது. சுவாரசியம் நிறைய; படித்து முடித்தால் எதுவுமே மனதில் நிற்காது. ‘வில்லு’ விஜய் போல் எஃபக்ட்.
இன்னும் இரண்டு ஆண்டுக்குள் குறிப்பிட்டுள்ள தமிழ் புத்தகங்களையாவது படிக்கப் பார்க்கிறேன்
//10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
21. ஒற்றன் – அசோகமித்திரன்
22. நிலா நிழல் – சுஜாதா
23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
Super. Thanks.
//40. சுப்பிரமணிய ராஜு கதைகள் [முழுத்தொகுப்பு]
Over-hyped.
//51. God of small things – அருந்ததிராய்
Cynical. Hyped.
//54. Interpreter of Maladies – ஜும்பா லாஹ்ரி
Really ?
Did you miss One Hundred Years of Solitude and Basheer ?
இத்தனையையும் பணம் கொடுத்து வாங்கி, படிச்சு முடிக்கணும்னா இதுக்கு யாராவது எனக்கு தனியா சம்பளம் கொடுத்தால்தான் முடியும்.
இப்போது கண்காட்சிக்கு போகும்போது பர்ஸை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன்..
Nice list of books. I’m adding few below.
– Book of Mirdad, Mikhail Naimy
– Siddhartha, Herman Hesse
– The Alchemist, Paulo Coelho
– The Prophet, Kahlil Gibran
– Meetings with Remarkable Men, G.I.Gurdjieff
– Jonathan Livingston Seagull, Richard Bach
– The Empty Boat, Osho
– Swami & Friends and other books of R.K.Narayan
[…] January 8, 2009 Writer Para – Books- Top 100 Posted by sivaramang under Top 100, பாரா, புத்தகம், வரிசை http://www.writerpara.net/archives/385 […]
Thanks for the list dear Mr.Para.
[…] இங்கே தனக்கு பிடித்த நூறு புத்தகங்கள… பற்றி குறிப்பிடுகிறார். நூறு […]
I started writing about your selections today in my blog at http://koottanchoru.wordpress.com/2010/02/22/பா-ராகவனின்-புத்தக-சிபார/
Thanks for making up the list.
சிந்தா நதி – லா.ச. ராமாமிருதம். முதல் ஐந்து கட்டுரைகள் படித்தேன். ஒண்ணும் விளங்கவில்லை. இதைப் பற்றி தங்களது கருத்து?
[…] (பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களி… எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி ) […]
[…] இங்கே இடம் காணாது. இஷ்டமிருந்தால் என்னுடைய இணையத்தளத்தில் அந்தப் பட்டியலைப் […]
[…] This post was mentioned on Twitter by Senthil Nathan, ஆயில்யன். ஆயில்யன் said: @vNattu @writerpara @haranprasanna நன்றி http://bit.ly/gsfjNK #இதெல்லாம்படிச்சுமுடிக்கிறதுக்குள்ள #சமகாலத்திலிருந்துடேக்டைவர்சன் […]
A list which does not contain Jayakantan’s books shows the bloggers prejudice.
ஐயா
வணக்கம். நான்கூட நான்கூட உங்களின் சிபாரிசு புத்தகங்களை வாசித்தேன். (பரிந்துரை செய்யப்பட்ட புத்தக தலைப்புகளை மட்டும்) பெருமூச்சு விட்டேன். ம்…. சிலருக்குத்தான் அறிவும் ஆர்வமும் இருக்கும். சிலருக்கு ஓரளவிற்கு ஒட்டிக்கொண்டிருக்கும். மேலும் சிலருக்கு சதவீத கணக்கில் இருக்கும். ஆசைதான் படிக்க வேண்டும் என்று ஆனால், மாதச் சம்பளம் என்னவாயிற்று என்று என் மனைவி கேட்கிறாளே? என்ன சொல்ல? அப்படியே இலவசமாக படிக்கக் கொடுத்தாலும் கூட எனது எண்ணங்கள் இங்கும் அங்கும் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. அதனை நிலைநிறுத்தி புத்தகக வாசிப்புக்குள் நிலைநிறுத்த வேண்டும். அதற்கு சூழல் ஒத்துழைக்க வேண்டும். முதலில் மனத்திலிருந்து வாழ்க்கை பத்தின பயம் ஒழிய வேண்டும். வாழ்க்கைக்காக படிப்பதா? அல்லது படிப்பதற்காக வாழ்வதா? முதல் ஏறக்குறைய முடித்திருக்க வேண்டும். உங்களைப்போன்று பிறகு… இரண்டாவது வரும். இது எல்லோருக்கும் அமையாதே…. அமைய வேண்டும் எனச் சொன்னால் மீண்டும் சொன்னதே திரும்ப திரும்ப வரும்.
ஏடுகுண்டல வாடா, வெங்கட்ட ரமணா காப்பாற்றுப்பா… காப்பாற்று…
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
இரா.கிரிதரன்
மேனாள் கணினி தட்டச்சர்
கிழக்குப் பதிப்பகம்,
சென்னை.
8939645250
[…] http://writerpara.com/paper/?p=385 […]