நாளை (மே 12) காலை பத்து மணிக்கு, சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலக வளாக அரங்கில் நடைபெறும் கல்லூரி மாணவர்களுக்கான எழுத்துப் பயிற்சி முகாமில் கலந்துகொள்கிறேன். பதிநான்கு நாள்கள் நடைபெறும் இம்முகாமில் உரைநடைப் பிரிவில் முதல் வகுப்பினை நான் எடுக்கிறேன். சிறந்த உரைநடை எழுத்தின் அடிப்படை இலக்கணங்கள் என்பது எனக்குத் தரப்பட்டுள்ள கருப்பொருள்.
அஞ்சலி: ரேவதி (என்கிற) ஈ.எஸ். ஹரிஹரன்
ரேவதி என்கிற ஈ.எஸ். ஹரிஹரன் நேற்றிரவு காலமானார் என்று இன்று காலை தகவல் வந்தது. வாழ்வில் யார் யார் இல்லாவிட்டால் இன்றைய நான் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். அந்தச் சிறிய பட்டியலில் அவர் இருந்தார்.
குறிப்புகளைப் பற்றிய ஒரு குறிப்பு
என் கையெழுத்து கெடத் தொடங்கிய புள்ளி, பால்பாயிண்ட் பேனாக்களில் எழுத ஆரம்பித்ததுதான் என்று நினைக்கிறேன். அதிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாறிய பின்பு, கையால் எழுதுவது அறவே நின்று போனது. எப்போதாவது எழுத நேரும்போதுதான் அது கெடத் தொடங்கியிருக்கிறது என்பது உறைக்கும்.
துயரங்களின் நிறை
மகிழ்ச்சியில் திளைப்பதென்பது நிகரற்ற பரவச அனுபவம். அதை வேண்டாம் என்று யாராலும் நினைக்க முடியாது. ஆனால் தொடர்ச்சியான செயல்பாட்டுக்கு வலு சேர்க்காத வெறும் மகிழ்ச்சியால் பயனில்லை. ஒரே ஒரு சிறிய வெற்றியை வாழ்நாள் முழுதும் நினைவுகூர்ந்துகொண்டு, பொழுதைப் போக்குவதாகிவிடும்.
பயண இலக்கியம்
இரயில் வண்டி பெருங்களத்தூர் நிறுத்தத்தை நெருங்கியது. பண்டொரு காலத்தில் பிற்காலப் பல்லவர்களுக்கும் மிச்சம் மீதமிருந்த பிற்காலச் சோழர்களுக்கும் யுத்தம் மூண்டபோது அது நிகழ்ந்த பெரும் களமாக இருந்தபடியினாலே அந்தத் தலத்துக்குப் பெரும் களத்தூர் என்ற பெயர் உண்டானது.


