சொல்வெளி

சர்வநாச பட்டன் – 8

அதிகாரம் 8: நடைப் பயிற்சி 1. சகஸ்ரநாமமோ சஷ்டி கவசமோ கேட்டபடி காலை நடைப் பயிற்சிக்கு வருபவர்கள் இந்த உலகுக்கு ஒரு செய்தியை மறைமுகமாக அறிவிக்கிறார்கள். வீட்டில் அவர்களுக்கு நல்ல காப்பி கிடைப்பதில்லை என்பதே அது. 2. பெண்கள் முன்னேற்றத்துக்காக இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறேன் என்று ஆவேசமாகக் கேட்டார் நண்பரொருவர். தினமும் நடைப்பயிற்சியின்போது என்னை அவர்கள் முந்திச் செல்ல விட்டு மகிழ்கிறேனே, போதாதா...

சர்வநாச பட்டன் – 7

அதிகாரம் 7: டீக்கடை நாலு பேர் டீ குடித்துக்கொண்டு நிற்கும் கடைக்குப் புதிதாக வருபவன் ‘ஒரு காப்பி’ என்று கேட்டால் ஆணவப் படுகொலை செய்யப் போவது போலப் பார்க்கிறார்கள். சுதாரித்துக்கொண்டு, ‘ஒரு வடை’ என்று கேட்டு வாங்கி அதைக் காப்பியில் முக்கி எடுத்துக் கடித்தால்தான் சமாதானமாகிறார்கள். டீயும் வடையும் தமிழர் உணவு. காப்பி நாம் தமிழர் உணவு. இரண்டு ரூபாய்க்கு விற்ற டீ, பன்னிரண்டு ரூபாய் ஆகிவிட்டாலும்...

சர்வநாச பட்டன் – 6

அதிகாரம் 6: புரட்சி 1. மிகப்பெரிய புரட்சிகளுக்கான முதல் புள்ளி பெரும்பாலும் சமையலறைகளில்தான் வைக்கப்படும். உதாரணமாக, விளாதிமிர் லெனினின் மனைவி நதெஸ்தா க்ருப்ஸ்கயா கட்சி வேலைகளில் லெனினைவிட பிசியாக இருந்ததால் கணவருக்கு நல்ல தேநீர் போட்டுத் தர வழியில்லாதிருந்தது. விளைவு, அடிக்கடி தோழர்களைச் சேர்த்துக்கொண்டு டீ குடிக்கச் சென்றவர், அப்படியே புரட்சியில் குதித்துவிட்டார். 2. புரட்சிகர எழுத்துகளில்...

சர்வநாச பட்டன் – 5

அதிகாரம் 5: பெண்கள் 1. பெண்கள் இரண்டு வகைப்படுவர். 1. ஆண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. இதர  பெண்கள் விரும்புவது போல இல்லாதவர்கள். 2. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற முதுமொழியில் ஒரு தவறான புரிதலுக்கான வாய்ப்புள்ளது. பொதுவாகப் பெண்கள் இன்னொரு பெண்ணை எதிரியாகக் கூட அண்ட விடமாட்டார்கள். 3. பெண்ணியம் என்பது சரியாக சாம்பார் வைக்க வராதவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம். 4. இருபது வருடங்களுக்கு...

சர்வநாச பட்டன் – 9

அதிகாரம் 9: விருது எழுதுவது ஒரு வேலை என்பது போல விருது வாங்குவது இன்னொரு வேலை. மிகச் சில எழுத்தாளர்களுக்கு மட்டுமே மல்ட்டி டாஸ்கிங் கைவருகிறது. பண முடிப்பு இல்லாத, சொப்பு சாமான் மட்டுமே கொண்ட விருதுகளை நிர்த்தாட்சண்யமாக நிராகரித்துவிடுகிறேன். ஐம்பது வயதுக்கு மேலே சொப்பு வைத்து விளையாடக் கூச்சமாக இருப்பதுதான் காரணம். நாற்பத்து நான்கு வயதில் நோபல் கொடுத்து ஆல்பர்ட் காம்யூவை பார்சல் பண்ணிவிட்டார்கள்...

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி