அதிகாரம் 1: சக மனிதன் நூறு நல்லவர்களை என்னிடம் தாருங்கள். நூறு பேருமே ஃப்ராடு என நான் நிரூபிக்கிறேன். ஓ! மனிதன் எத்தனை சிறந்த கமிஷன் ஏஜெண்ட்! நல்ல மனிதர்கள் என்று யாருமில்லை. எல்லோருமே சுமாரான அசெம்பிள்டு செட்தான். மனித குலத்தின் ஆகப் பெரிய பிரச்னை, அன்பு நிறைந்து பொங்கி வழிவது போல அவ்வப்போது காட்ட வேண்டி இருப்பதுதான். ஆண்டவா, உறவுக்காரர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. சக மனிதனை நான்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் வசித்தல்
தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.
மிருது மீம் போட்டி அறிவிப்பு
ஜந்துவை வாட்சப் சேனலில் தொடராக எழுதிய சமயத்தில் எந்தப் போட்டி அறிவிப்பும் இல்லாமலேயே மீம் புரட்சி செய்த வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
உங்கள் ஈடுபாட்டை மதித்து இம்முறை போட்டி அறிவிக்கிறேன்.
மிருது மதிப்புரைப் போட்டி அறிவிப்பு
நண்பர்களுக்கு வணக்கம். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வாட்சப் சேனலில் ‘மிருது’ நாவலை எழுதத் தொடங்குகிறேன். இது நாள்தோறும் அங்கே பிரசுரமாகும்.
அச்சம், விசுவாசம், அடிமைத்தனம்
விசுவாசம் அல்லது அடிமைத்தனத்தின் மூலம் தாற்காலிக லாபம் பெறுவோர் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானவர்களே. கும்பல் மனநிலையுடன் ஒருமித்த குரலில் ஒலிக்கும்போது கிடைக்கும் அற்பக் கிளர்ச்சியே பெரும்பாலானோருக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது. இது தனது தனித்துவத்தைக் கண்டறிய முடியாமையின் சோகம் அல்லது தனக்குத் தனித்துவம் உள்ளதென்றே உணர முடியாமையின் அபத்தம்.


