ஒரு ஊரில் ஒரு தகவல் பிழை இருந்தது. பிறக்கும்போதே அது பிழைபட்டு இருந்ததால் அதனை மறைக்க அதன் பெற்றோர் அது ஓர் அற்புதம் என்றும் வரம் வாங்கிப் பெற்றது என்றும் சொல்லிப் பரப்பிவிட்டார்கள். வயது ஆக ஆக அத்தகவல் பிழையின் தோற்றத்தைக் குறித்த வதந்திகளும் சிலாகிப்புகளும் ஊரெங்கும் பரவத் தொடங்கின. காரணம், அதன் பெற்றோர் அதனை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதே இல்லை. பொத்திப் பொத்தி வளர்க்கும் தங்கள் குழந்தையைக்...
ஜல்லிக்கட்டு
இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் இப்படி உணர்வுபூர்வமாகத் திரண்டெழுந்த சம்பவம் வேறு நிகழ்ந்ததில்லை. எனக்கென்னவோ, ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது இளைய தலைமுறையின் பல்வேறு அதிருப்திகளின் அடையாளப் பிரதிபலிப்பாகத்தான் தோன்றுகிறது. முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்கள் தொடங்கி நேற்றைய / இன்றைய தாள் பணமற்ற பொருளாதார மண்டையிடிகள் வரை துவண்டு கிடந்த சமூகத்துக்கு ஒரு வெளிப்பாட்டுத்...