மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலின் கிண்டில் பதிப்பு தயார். மார்ச் முதல் தேதி வெளியாகிறது. இன்று முதல் இந்நூலின் மின் பதிப்புக்கான முன்பதிவு தொடங்குகிறது. மின்நூலின் விலை ரூ. 225. முன்பதிவுச் சலுகை விலை ரூ. 150 முன்பதிவுச் சலுகை விலை பிப்ரவரி 28 நள்ளிரவு வரை இருக்கும். நூல் அதிகாரபூர்வமாக வெளியானதும் விலை 225க்குச் சென்றுவிடும். முன்பதிவு செய்வோர் நூலைப் பெற தனியே ஏதும்...
இந்த வருடம் இரண்டு புத்தகங்கள்
2023 ஆம் ஆண்டுக்கென ஐந்து திட்டங்களை வகுத்திருந்தேன். மார்ச் தொடங்கி அக்டோபருக்குள் நிறைவு செய்துவிட வசதியாக அன்றாடம் என்னென்ன / எவ்வளவு எழுத வேண்டும், எப்போது என்னென்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் மிகவும் கவனமாகக் கணக்கிட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவரைப் போலச் செயல்பட்டேன். இயல்பாகவே ரிஷப ராசி என்பதனாலா, சனிதசை கேது புக்தி என்கிற தனிச் சிறப்புக் காரணத்தாலா என்று தெரியவில்லை. நான் போட்ட ஐந்து...
மணிப்பூர் கலவரம்: ஒரு பார்வை – சுனிதா கணேஷ்குமார்
சமீபத்தில் மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட, மணிப்பூரின் வரலாற்று படைப்பாகவே இருக்கிறது இந்த நூல்.. இனக்கலவரம் என்ற பெயரின் பின்னால் நடக்கும் அரசியலின் இருண்ட பக்கங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது.. மணிப்பூர் மாநிலத்தில் மலைத்தொடர்களில் வசிக்கும் பழங்குடி இனமக்கள் குக்கிகள், நாகாக்கள் மற்றும் சில பழங்குடி இனமக்கள்...
விலகியிருத்தல்
சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன். உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது. முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய...
ஆட்டோகிராஃப்
பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிளுகிளுப்பு தரக்கூடிய சில விஷயங்களுள் ஒன்று, புத்தகங்களில் கையெழுத்திடுவது. எழுதத் தொடங்கி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்த மகிழ்ச்சி அருளப்பட்டது. மறக்கவே முடியாது. 2005 சென்னை புத்தகக் காட்சியில் டாலர் தேசம் வெளியாகியிருந்த நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முதல் நாற்பது கையெழுத்துகள் போடுவேன். அவ்வளவு பேர் நம்மை விரும்புகிறார்கள், நம் எழுத்தை...
மணிப்பூர் கலவரம்: புத்தக முன்பதிவு விவரம்
வெளிவர இருக்கும் என்னுடைய மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் நூலுக்கு இப்போது முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வோருக்கு ஜீரோ டிகிரி இணையத்தளத்தில் இருபத்தைந்து சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்க்கைப் பின் தொடர்ந்து பதிவு செய்யலாம். புத்தகம் மிக விரைவில் வெளிவரும்.
மணிப்பூர் கலவரம்: புதிய புத்தகம்
மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம். இதுதான் தலைப்பு. கடந்த ஐந்து மாதங்களாகச் செய்துகொண்டிருந்த ஆய்வு நிறைவு பெற்று, இப்போது புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எழுத்து பிரசுர வெளியீடாக விரைவில் வெளிவரும்.
அட்டைப் படம் வடிவமைப்பு: பாலா, சேலம்.