எப்படி முயற்சி செய்தாலும் சில கிறுக்குத்தனங்களை என்னால் விட முடிவதேயில்லை. எழுத்தாளர்கள் கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பார்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. மிகவும் நேர்த்தியாக வாழும் பல எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். என்னுடைய கிறுக்குத்தனங்களுக்கான பழியை மரபணுவின் மீது போட்டுவிடலாமா என்றால் அதுவும் முடிவதில்லை. வம்சத்தில் என்னைத் தவிர பிறர் சரியாகத்தான் இருக்கிறார்கள். நான் மட்டும்தான்...
இறவான் ஒரு பார்வை – கதிரவன் ரத்தினவேல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தகங்கள் வந்தடைவதும் அதை எடுத்து வாசிப்பதற்கான காரணமுமே சுவாரசியமானதொரு தனிக்கதையாக அமையும். கடந்த புத்தக திருவிழாவில் பாரா இறவான் நூலை வெளியிடுகிறார். அங்கு சென்ற பொழுது யதெச்சையாக அவரை சந்திக்க நேர்கிறது(கண்டிப்பாக என்னை பார்த்தது அவர் நினைவிலிருக்காது என நம்புகிறேன்). அவரிடம் இறவான் வாங்கப்போவதாக சொல்கிறேன். புன்னகைத்தபடி விடை கொடுக்கிறார். ஆனால் நான் அங்கு...
இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்
சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது. அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார். ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை. இருவரின் நோக்கமும் என்னவாக இருந்தாலும்...