மண்டபத்தில் யாரும் உதவாமல் நானே சொந்தமாகச் செய்துபார்த்த முயற்சி. மெதுவாக ஓடும் படம் என்பதால் இதனைக் கலைப்படம் என்று சொல்ல முடியாது. அதே சமயம் கலைக்கு எதிரான படமும் அல்ல என்பதால் என்ன சொல்வதென்று சரியாகத் தெரியவில்லை. மொத்தத்தில் உங்களுக்கு நேரம் சரியில்லை என்பது மட்டும் உறுதி. இந்த அபாரமான படமாக்கல் முயற்சியை இவ்வழியில் என் முன்னோரான ரைட்டர் பேயோனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
கனகவேல் காக்க
கனகவேல் காக்க செப்டெம்பரில் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. ஆயிரம் ப்ரிண்டுகள், அகிலமெங்கும் ரிலீஸ், கோடி சம்பள ஹீரோ, அசகாயத் தொழில்நுட்ப சாகசங்கள் என்று கதைவிட ஒன்றுமில்லை. கதை பலத்தை நம்பி வெளிவரும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படம். கதைக்குக் கரண், கனவுக்கு ஹரிப்ரியா, காரத்துக்குக் கோட்டா சீனிவாசராவ். பாங்காக்கில் கனவுப்பாடல், பாண்டிச்சேரியில் பாம் ப்ளாஸ்ட் சீக்வன்ஸ், சஸ்பென்ஸ், ஆக்ஷன்...
ஒரு முக்கியமான புத்தகம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம். தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும். டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில்...