டிசம்பர் 16, 17 தேதிகளில் கோயமுத்தூரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன். தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான யுவன் சந்திரசேகருக்கு இவ்வாண்டு விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, மலேசிய எழுத்தாளர் ஜாஹிர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் யுவனை வாழ்த்திப் பேசினார்கள். விழாவில் யுவனைக் குறித்த ஆவணப் படம் ஒன்று திரையிடப்பட்டது...
தமிழ், நூல்கள், நூலகங்கள்: அன்றும் இன்றும்
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழா – 2023 கொண்டாட்டங்கள், ஏப்ரல் 23ம் தேதி அன்று சென்னை நகரில் 18 நூலகங்களில் நிகழ்ந்தன. தேவநேயப் பாவாணர் மாவட்ட மத்திய நூலக அரங்கில் இதன் தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
உரையின் யூட்யூப் லிங்க் இங்கே உள்ளது.
தேவனுக்காக ஒரு மாலை
தேவன் பிறந்த நாள் விழா – அவரது ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆழ்வார்பேட்டை சிவகாமி பெத்தாச்சி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தேவனின் ரசிகர்கள் – வாசகர்கள் சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். தேவன் அறக்கட்டளை சார்பில் சாருகேசி வரவேற்புரை நிகழ்த்தினார். அசோகமித்திரன் நூல்களை [கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி. சந்துரு, லக்ஷ்மி கடாட்சம்] வெளியிட்டுப்...
ஞான் அவிடெ…
ஐ.எஸ்.ஆர்.ஓ. நம்பி நாராயணன் விவகாரம் உச்சத்தில் இருந்தபோது சென்றதுதான் கடைசி. பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் திருவனந்தபுரத்துக்குத் திரும்பச் செல்கிறேன். அதே குறைந்தபட்ச டிராஃபிக். அதே அழகான சூழ்நிலை. அதைவிட அழகான பெண்கள். செடிகள் காற்றில் அசைந்தாடுவதுபோல் அனைத்துப் பெண்களின் கூந்தலும் காற்றில் அலைபாய்கிறது. யாரும் பின்னல் போடுவதில்லை. இன்னும் உண்டு ரசிப்பதற்கு. ஆட்டோவில் குறைந்தபட்சக்...
நவீனத்துவத்தின் முகம்
நவீன இலக்கியம் என்றால் என்ன என்று நேற்று பின்னூட்டப் பெரியவர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். அகராதி வைத்துப் படிக்க வேண்டியவையெல்லாம் பழைய இலக்கியம், அகராதி துணையின்றிப் படிக்க முடிகிறவை நவீன இலக்கியம் என்று சொல்லிவிடலாமா என்று அவரே தமது முடிவையும் இங்கே முன்வைத்திருந்தார். இம்மாதிரி விவகாரங்களில் பொதுவாக நான் கருத்து சொல்லுவதில்லை. இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தீவிரவாதி மனநிலை கொண்ட வாசகன்...