குமுதத்தில்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அனுமார் குங்குமம் என்கிற ஆரஞ்சு நிற குங்குமப் பொட்டும் தலையில் கட்டிய கர்ச்சிப்பும் கையில் ஹெல்மெட்டுமாக அரக்கபரக்க அலுவலகத்துக்குள் நுழையும் பார்த்தசாரதி. அறிமுகப்படுத்தியபோது, டாட்காம் இவருடைய பொறுப்பில்தான் வருகிறது என்று சொன்னார்கள். குமுதம் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் ஓய்வு பெறவேண்டிய சில கிழவர்களை மட்டும் வேலைக்கு வைத்துக்கொண்டு ஒண்டியாளாக அந்தப்...
பார்த்தசாரதிகளின் கதை [பாகம்2]
குமுதம் பதிப்பாளர் அமரர் பார்த்தசாரதியுடன் எனக்கு நேரடி அனுபவங்கள் மிகவும் குறைவு. மூன்றாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவருடனான என்னுடைய நினைவுகள் சொற்பமானவை. ஆனால் மிகவும் முக்கியமானவை. நான் குமுதத்துக்குச் சென்ற காலத்தில் அவர் அநேகமாகத் தன்னுடைய பொறுப்புகளிலிருந்து மெல்ல மெல்ல விலகத் தொடங்கியிருந்தார். மாலைமதி [மாத நாவல்] மட்டும் அப்போதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது...
பார்த்தசாரதிகளின் கதை [பாகம்1]
எனக்கு மூன்று பார்த்தசாரதிகளைத் தெரியும். ஒருவர் என் தந்தை. ஒருவர் என் நண்பர். இன்னொருவரின் நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்திருக்கிறேன். இம்மூன்று பார்த்தசாரதிகளிடமும் என்னை வியப்பிலாழ்த்திய ஓர் ஒற்றுமை, மூவரும் மிகப்பெரிய பர்ஃபெக்ஷனிஸ்டுகள். ஒழுங்கீனத்தை வாழ்வின் ஆதாரகதியாகக் கொண்டு வாழ்கிறவன் என்றபடியால் இவர்கள் மூவர் மீதான என்னுடைய மதிப்பும் மரியாதையும் அளவிடற்கரியது. என் தந்தை பள்ளி...
புதையல் காக்கும் பாட்டி
எண்பத்திரண்டு வயதான ரங்கநாயகி அம்மாளுக்கு திடீரென்று சமீபத்தில் ஒருநாள் நினைவு தவறிப்போனது. நினைவு தவறிக்கொண்டிருந்த வினாடிகளில் தன்னுடைய பர்ஸ் எங்கே இருக்கிறது; உள்ளே எத்தனை பணம் இருக்கிறது என்கிற இரண்டு விவரங்களையும் – தற்செயலாக அருகில் அப்போதிருந்த தன் மூத்த மகளிடம் சொல்லியபடியே மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு எடுத்துப் போனார்கள். ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துபோனது காரணம் என்று...