அவன் அப்போது பிரபலமில்லை. உள்ளூரில் மட்டும் ஒரு சிலருக்கு அவனுடைய இசையின் அருமை தெரியும். என்றைக்காவது எதையாவது சாதிக்கக்கூடியவன். இன்றைக்குச் செய்யும் இம்சைகளை அதனால் பொறுத்துக்கொள்வோம். நள்ளிரவு தொலைபேசியில் அழைத்து பாடிக்காட்டுகிறாயா? சரி, பாடு. கஞ்சா குடித்துவிட்டு சுய சோகத்தில் புலம்பி வேலையைக் கெடுக்கிறாயா? செய். பணப்பிரச்னை. அது எப்போதுமிருக்கிறது. இந்தா, என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவே...
தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2008
பன்னிரண்டு ஹால்கள். இரண்டாயிரம் நிறுவனங்கள். இருபது தேசங்கள். பிரகதி மைதான், புதுதில்லி. சர்வதேச புத்தகக் கண்காட்சி பத்து நாள்கள் நடந்து, இம்மாதம் பத்தாம் தேதி முடிவடைந்தது. அடிக்கிற குளிர்க்காற்றுக்குத் தொட்டுக்கொள்ள கோன் ஐஸுடன் ஸ்வெட்டர் அணிந்த தில்லி பெண்கள் அழகழகாக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க, குண்டு வால்யூம் என்சைக்ளோபீடியா, டிக்ஷனரிகளுடன் விற்பனைப் பிரதிநிதிகள் வழியெல்லாம் இடைமறித்து...