கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் என். சங்கரய்யா காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள். சங்கரய்யா எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியாத வயதில் அவர் வசிக்கும் வீதியில், அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளிக் குடிபோனோம். குரோம்பேட்டை அன்றைக்கு அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருக்கும். எங்கெங்கும் சீமைக் கருவேல புதர்களும் புதர் இடுக்குப் பன்றிகளும் இருக்கும். வீதியில் பெரிய நடமாட்டம்...
சுண்டல்
டாஸ்மாக் என்கிற அரசு நிறுவனமோ, அதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த காயத்ரி ஒயின்ஸ், குஷ்பு ஒயின்ஸ், ரஞ்சி ஒயின்ஸ் போன்ற களப்பிரர்களோ பேட்டைக்கு வருவதற்கு முன்னால் ரயில் நிலையத்துக்கு நேரெதிரே ஒரு சைக்கிள் ஸ்டாண்டும் அதனருகில் ஒரு சாராயக்கடையும் (Arrack Shop என்று ஆங்கிலத்திலும் எதற்கோ எழுதியிருப்பார்கள்.) இருந்தன. சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு, உள் வழியாகவே சாராயக்கடைக்குள்ளே சென்றுவிட...
33 நாயன்மார்கள்
நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் காலனி மெயின் ரோடில் பன்னிரண்டு பேர். பிறருக்குக் குறிப்பிட்ட இருப்பிடம் கிடையாது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பவர்கள். பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் வாகனதாரிகளாக வேண்டும், யாரும் கால்நடையாக எங்கும் சென்று...
கனவுகளின் பலன் (கதை)
ஒரு ஊரில் அப்துல் கலாம் என்றொரு பின்னாள் விஞ்ஞானி படித்துக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஒரு மலை இருந்தது. அது பச்சை மலை எனப்பட்டது. பச்சை மலையின் உச்சியில் இரவு நேரத்தில் தோன்றும் நிலாவைக் காட்டி, “ஒரு நாள் அங்கே நாம் குடி போக முடியும்” என்று அப்துல் கலாம் சொன்னார். அதெப்படி அவ்வளவு உயரம் போக முடியும் என்று ஊர் மக்கள் சந்தேகப்பட்டுக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், “ முடியும், உச்சத்தைக் கனவில்...
பேட்டை புராணம்
சில நடைமுறை வசதிகளை உத்தேசித்து என் இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்தேன். குரோம்பேட்டையிலிருந்து கோடம்பாக்கத்துக்கு. சம்பிரதாயங்கள்மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட என் பெற்றோர் உடன் வந்து பால் காய்ச்சி சர்க்கரை போட்டு எனக்கு ஒரு தம்ளர் கொடுத்துவிட்டு அவர்களும் ஆளுக்கொரு வாய் சாப்பிட்டுவிட்டு, ‘வீடு நல்லாருக்குடா’ என்று சொன்னார்கள்.[ஆனால் வாடகை அத்தனை நன்றாக இல்லை.] நான் பார்த்திருக்கும் வீட்டுக்கு...